My attentions

Tuesday 1 January, 2013

2013 மக்களவைத் தேர்தலில் மதிமுக போட்டியிடும்: வைகோ


கூட்டணி தொடர்பான முடிவுகளை இப்போது தெரிவிக்க முடியாது. ஆனால், மக்களவைத் தேர்தலில் மதிமுக போட்டியிடும் என்றார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
புத்தாண்டு தினத்தையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்து கூறியது:-
மக்களவைத் தேர்தலில் மதிமுக போட்டியிடும். தேர்தல் கூட்டணி, தேர்தல் வியூகம் பற்றியெல்லாம் இப்போது எதுவும் தெரிவிக்க முடியாது. சுயமரியாதையை நிலைநாட்டும் வகையில் எங்கள் முடிவுகள் இருக்கும்.
மக்களவைத் தேர்தலில் நான் (வைகோ) போட்டியிடுவது பற்றி இப்போது சொல்ல முடியாது. ஆனால் கட்சி போட்டியிடும்.
மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ("டிராய்') தன் கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
"டிராய்' தமிழக அரசுக்கு கேபிள் டிவிக்கு உரிமம் வழங்க முன் வரவேண்டும். குறைவான செலவில் அதிக சேனல்களை மக்கள் பார்க்கலாம் எனும்போது, அதை வழங்குவதில் தவறில்லை.
நாஞ்சில் சம்பத் கட்சியை விட்டு விலகியதைப் பற்றி கருத்து கூற விரும்பவில்லை.
பெண்களுக்கு எதிரான வன்முறையைக் குறைக்க கடுமையான தண்டனைகள் வழங்குவதுதான் தீர்வாக அமையும் என்று நான் கருதவில்லை. இதுபோன்ற குற்றங்கள் அதிகரிப்பதற்கு மதுதான் முக்கிய காரணம்.
எனவே, மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். அதனை வலியுறுத்தி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். இதற்கு மகளிர் பேராதரவு தருகின்றனர்.
காவிரி பிரச்னையில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தமிழகத்துக்குத் துரோகம் செய்து வருகிறது.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்றார் அவர்.

Wednesday 20 June, 2012

விஜய் விருதுகள் 2012

சிறந்த திரைப்படம் - Engey Eppodhum
சிறந்த நடிகர் - விக்ரம் (Deiva Thirumagal)
சிறந்த நடிகை - அஞ்சலி (Engey Eppodhum)
சிறந்த வில்லன் - அஜித் (Mankatha)
சிறந்த இயக்குநர் - வெற்றிமாறன் (Aadukalam)
சிறந்த துணை நடிகர் - சரத் குமார் (காஞ்சனா)
சிறந்த துணை நடிகை - உமா ரியாஜ் (Mounaguru)
சிறந்த நகைச்சுவை நடிகர் - சந்தானம் (உள்ளே)
சிறந்த நகைச்சுவை நடிகர் ஜூரி விருது - சாரா கொவால் (காஞ்சனா)
சிறந்த திரை ப்ளே - Thiagarajan குமார் ராஜா (Aaranya Kaandam)
சிறந்த அறிமுக நடிகர் - நானி (Veppam)
சிறந்த உரையாடல் - Samuthikirani (Poraali)
சிறந்த இசையமைப்பாளர் - ஜி.வி. பிரகாஷ் (Aadukalam)
சிறந்த பின்னணி இசை - யுவன் ஷங்கர் ராஜா (Aaranya Kaandam)
சிறந்த ஒளிப்பதிவாளர் - PS, வினோத் (Aaranya Kaandam)
சிறந்த கலை இயக்குனர் - பார்த்தேன் (Vaagai சூத் ஒலி)
சிறந்த ஸ்டண்ட் இயக்குனர் - Dillip சுப்ப Rayan (Aaranya Kaandam)
சிறந்த நடன அமைப்பு - சுசித்ரா (அவந்த் இவான் இருந்து தியா தியா பாடல்)
சிறந்த எடிட்டர் - கிஷோர் (Engey Eppodhum)
சிறந்த ஒப்பனை - Kodandapani (7aam ARIVA)
சிறந்த பாடல் - Yathe Yathe (Aadukalam)
சிறந்த பாடகர் (ஆண்) - Aiyo க்கான எஸ்.பி. (Aadukalam)
சிறந்த பாடகர் (பெண்) - Saar Kaathu க்கான Chinmayee (Vaagai சூத் ஒலி)
ஆண்டின் சிறந்த கண்டுபிடி - கிப்ரான் (Vaagai சூத் ஒலி)
சிறந்த க்ரூ - Aadukalam அணி
பிடித்த இயக்குநர் - வெங்கட் பிரபு (Mankatha)
ஃபேவரைட் திரைப்பட - கோ
பிடித்த பாடல் - Enammo Yedho (கோ)
சிறப்பு ஜூரி விருது - பேபி சாரா (Deiva Thirumagal)
செவாலியர் சிவா விருது - எஸ்.பி.பி.
சிறந்த பொழுதுபோக்கர் - தனுஷ்

Thursday 28 July, 2011

குஜராத்தில் இரண்டவது கார் ஆலை: ஃபோர்டு

அமெரிக்காவின் பிரபல போர்ட் கார் நிறுவனம் இந்தியாவில் மேலும் ஒரு தொழிற்சாலையை நிறுவ இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் அமைய இருக்கும் இந்தத் தொழிற்சாலை, சுமார் 4000 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும் என போர்ட் நிறுவன தலைமை நிர்வாகி ஜோன் ஹின்ரிக்ஸ் தெரிவித்தார்.
சுமார் 5000 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் இந்தப் புதிய தொழிற்சாலையில், சுமார் 2 இலட்சத்து 40 ஆயிரம் கார்கள் வருடத்திற்கு உற்பத்தி செய்யப்படும் என்று அந்த நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சென்னையில் போர்ட் நிறுவனத்தின் தொழிற்சாலை சுமார் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Thursday 19 May, 2011

58வது தேசிய திரைப்பட விருதுகள் - தமிழுக்கு 14

தேசிய திரைப்பட விருதுகள் இன்று தில்லியில் அறிவிக்கப்பட்டன.
இதில், நடிகர் தனுஷ்க்கும் மலையாள நடிகர் சலீம் குமாருக்கும் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகைக்கான தேசிய விருது சரண்யா பொன்வண்ணனுக்கு கிடைத்துள்ளது.
ஆடுகளம் திரைப்படத்தின் இயக்குநர் வெற்றி மாறனுக்கு சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
சிறந்த படத்துக்கான சிவராம காரந்த் விருது மற்றும் சிறந்த எடிட்டிங்குக்கான விருது கிஷோருக்குக் கிடைத்துள்ளது.
ஆடுகளத்தில் நடித்த ஈழத்தைச் சேர்ந்த கவிஞர் ஜெயபாலனுக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கவிஞர் வைரமுத்துவுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது (படம் - தென்மேற்குப் பருவக்காற்று)
சிறந்த நடன அமைப்புக்கான விருது ஆடுகளம் படத்தின் நடன இயக்குநர் தினேஷ் குமாருக்கு கிடைத்துள்ளது.
எந்திரன் - சிறப்பு ஸ்பெஷல் எபக்ட்ஸுக்காக ஸ்ரீனிவாஸ்மோகன் விருது பெறுகிறார்.
எந்திரன் - சிறந்த கலை-தயாரிப்பு வடிவமைப்புக்காக சாபு சிரில் விருது பெறுகிறார்.
சிறந்த தமிழ்ப் படம் - தென்மேற்கு பருவக்காற்று
மைனா படத்தில் நடித்த தம்பி ராமய்யாவுக்கு சிறந்த துணை நடிகர் விருது.
சிறந்த துணை நடிகை விருது சுகுமாரிக்குக் கிடைத்துள்ளது. நம் கிராமம் என்ற படத்துக்காக அவர் இதைப் பெறுகிறார்.

Wednesday 27 April, 2011

இந்திய அணியின் பயிற்சியாளராக டங்கன் ஃபிளட்சர் நியமனம்

கேரி கிர்ஸ்டனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக டங்கன் ஃபிளட்சர் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இந்த விவகாரத்தில் பல வாரங்களாக நீடித்துவந்த சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்துள்ளது.
ஃபிளட்சர் ஜிம்பாப்வேயைச் சேர்ந்தவர். 1999-ல் இருந்து 2007 வரை இங்கிலாந்துக்கு இவர் பயிற்சி அளித்துள்ளார். அடுத்த 2 ஆண்டுகளுக்கு இவர் இந்த பதவியில் இருப்பார்.
பிசிசிஐயின் செயற்குழுக் கூட்டத்தில் ஃபிளட்சரை நியமிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.
ஃபிளட்சர் 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் முன்கூட்டியே திட்டமிட்டிருந்த சில பணிகளை செய்யவேண்டி இருப்பதால் மேற்கிந்தியத் தீவுகளில் இந்திய அணியுடன் அவர் சேர்ந்துகொள்ள முடியாமல் போகலாம் என பிசிசிஐ செயலர் ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.
கிர்ஸ்டனின் பதவிக்காலத்தில் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த எரிக் சைமன்ஸ், அதே பதவியில் தொடர்வார் என அவர் குறிப்பிட்டார்.
ஃபிளட்சர் 1983 உலகக் கோப்பை போட்டியின்போது ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக இருந்தவர். சர்வதேச அளவில் 6 ஒருதினப் போட்டிகளில் இவர் விளையாடி உள்ளார்.