Showing posts with label Info. Show all posts
Showing posts with label Info. Show all posts

Saturday, 15 January 2011

பெட்ரோல் விலை - ஒரு பார்வை

Source : IOCL

Tuesday, 11 January 2011

Nokia Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி?

உங்களுடைய கை தொலைபேசியிலும் இலும் தமிழ் website ஐ பார்க்க முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான், உங்களுடைய phone இல் www.opera.com இங்கு செல்லவும்.
opera for phones download opera mini 5.1 (271 KB) download செய்த பிறகு Address Bar இல் www. ஐ அழித்து விட்டு opera:config என டைப் செய்யுங்கள் ஆக கடைசியில் use bitmap fonts for complex scripts என்பது No என்று இருக்கும் அதை yes என மாற்றி விட்டு save செய்து கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் Opera வை exit செய்து விட்டு மீண்டும் open செய்யுங்கள். தமிழ் தளம் இனி உங்களுடைய phone இல் சரியாக வேலை செய்கின்றதா என தெரிந்து கொள்ள மேலே உள்ள Google search இல் nimzath என தேடி பார்க்கவும்.

Sunday, 5 December 2010

மழையால் எங்கும் தண்ணீர் - ஊரப்பாக்கம்

என் வீட்டை சுற்றி தண்ணீர் ஓடுகிறது..


Wednesday, 28 July 2010

Nokia X6 8GB in India for 14,499 INR

Nokia continues to flood the Indian markets with new phone launches. The latest entrant in the lineup of new phones from Nokia is the X6 8GB. Priced at Rs. 14,499, the official announcement of the X6 8GB was made on Twitter by Nokia.
The device has a 3.2 inch capacitive touch screen with an aspect ratio of 16:9. It packs in a 5MP camera with dual LED flash and supports TV out and online share options. The X6 8GB runs on Symbian OS S60 5.0 and has Bluetooth, USB, WLAN connectivity features.
Basically a music phone, the X6 8GB plays various music formats like MP3, SpMidi, AAC, AAC+, eAAC+, WMA and MTP. It plays 35 hours of music and 4.5 hours of video. The talk time of the phone scores at 11.5 hours on GSM and 6 hours on 3G.
With other Nokia phones like C3, C6, E5 coming to Indian market soon, looks like it's raining phones for the Indian consumer who can well be spoilt for choice.

Tuesday, 20 July 2010

லண்டனின் பத்து பிரபல மொழிகளில் தமிழுக்கு இடம்!

லண்டன்: உலகத் தமிழர்களுக்கு இதோ ஒரு நற்செய்தி. லண்டனின் பிரபலமான பத்து மொழிகளில் நமது அன்னைத் தமிழுக்கும் இடம் கிடைத்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்திக்கு இடமில்லை. மாறாக பெங்காலி, பஞ்சாபி ஆகியவை இடம் பிடித்துள்ளன.
இந்த தகவலை லண்டன் காவல்துறை வெளியிட்டுள்ளது. அங்கு அவசர தேவைக்காக காவல்துறைக்கு தொலைபேசி மூலம் அழைப்பவர்களில் தினசரி கிட்டத்தட்ட 8 ஆயிரம் பேரும், சாதாரண அழைப்புகளில் 12 ஆயிரம் பேரும் தமிழில் பேசுகிறார்களாம்.
ஆங்கிலம் அல்லாத பிற மொழிகள் வரிசையில் பிரபலமான மொழிகளாக பத்து மொழிகளை லண்டன்காவல்துறை வகைப்படுத்தி வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் லண்டன் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் பத்து பிரபல மொழிகளாக தமிழ், பிரெஞ்சு, ரோமன், பஞ்சாபி, துருக்கி, பெங்காலி, ஸ்பானிஷ், சோமாலி, போலிஷ், போர்ச்சுகீஸ் ஆகிய மொழிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வரிசையில் இந்திக்கு இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன் வாழ் பொதுமக்கள் தங்களது அவசரத் தேவைக்கு எந்த மொழியில் வேண்டுமானாலும் தொலைபேசி மூலம் அழைக்கலாம் என லண்டன் காவல்துறை சமீபத்தில்தான் அறிவித்திருந்தது. இதன் பிறகுதான் அதிக பிரபலமான மொழிகள் எவை என்பதை காவல்துறை உணர்ந்தது.
ஆங்கிலம் தவிர்த்த வேறு மொழிகளில் யாராவது பேசினால் உடனடியாக அதை மொழி பெயர்த்துச் சொல்லும் வசதியை லண்டன் காவல்துறை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
லண்டன் காவல்துறைக்கான தொலைபேசி அழைப்புப் பிரிவு அதிகாரி ஹாரிங்டன் இதுகுறித்துக் கூறுகையில், ஆங்கிலம் உங்களது தாய் மொழியாக இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை, நீங்கள் எந்த நேரத்திலும் எங்களை அழைக்கலாம். நீங்கள் பேசும் மொழியில் உடனுக்குடன் மொழிபெயர்த்துக் கூறும் வசதியை நாங்கள் வைத்திருக்கிறோம். சம்பந்தப்பட்ட மொழிக்குரிய மொழிபெயர்ப்பாளர் 24 மணி நேரம் தயாராக இருப்பார் என்றார்.

Sunday, 11 April 2010

மொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க

உங்களுடைய wi-fi மொபைல் ஃபோனில் இந்நேரம்.காம் / ஜிமெயில் போன்ற தளங்களில் இருந்து தமிழில் வாசிக்க சிரமம் உள்ளதா? இதோ உதவிக்குறிப்புகள்:
முதலில் http://www.opera.com/mini/ எனும் முகவரிக்குச் சென்று ஒபெரா மினி டவுன்லோட் செய்யவும்.
உங்களின் வை-ஃபை மொபைல் ஃபோன் மூலம் மேற்கண்ட முகவரிக்குச் சென்றிருந்தால் நேரடியாக மொபைலில் டவுன்லோடு செய்து இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். அல்லது FireFox, IE போன்ற உங்கள் கம்ப்யூட்டரின் ப்ரவுஸர் மூலம் டவுன்லோடு செய்திருந்தால் அதை USB cable மூலமாகவோ அல்லது card reader மூலமாகவோ இன்ஸ்டால் செய்யவும்.
இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்த பிறகு...
1. opera mini browser open செய்யவும்
2. அட்ரஸ் பாரில் opera:config என்பதை டைப் செய்து ஒகே கொடுக்கவும். (www என்று டிஃபால்ட்டாகத் தெரியும் எழுத்துக்களை நீக்கிவிட வேண்டும்)
3. வரும் "பவர் யூஸர் செட்டிங்ஸ்" பக்கத்தில் use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.
இவ்வாறு செய்வதன் மூலம் தமிழ் எழுத்துருக்கள் தெளிவாக தெரிய ஆரம்பிக்கும். மீண்டும் ஒபெரா மினியை restart செய்யவும். இந்நேரம்.காம் செய்தித் தளத்தினை அனுபவித்து மகிழவும்.
பின்குறிப்பு: நாம் கூறிய Use bitmap fonts என்ற ஆப்ஷனை எனேபிள் செய்யும் வரை யுனிகோடு தமிழ் தள எழுத்துருக்கள் கட்டம் கட்டமாகத் தான் தெரியும். ஒரு முறை எனேபிள் செய்துவிட்டால் யுனிகோடு தளங்களோடு ஜிமெயில், யாஹூ, ஹாட்மெயில் போன்ற எந்த ஒரு மின் அஞ்சல் சேவையையும் தமிழில் தங்கு தடையின்றி வாசிக்க இயலும்.
Opera ஸெட்டிங் இல் மொபைல் வியூ என்ற ஆப்ஷன் உள்ளது. இதனை டிக் அடித்து சேமித்தால் டெக்ஸ்ட் ஆனது வாசிக்க மிக எளிதாக (printer friendly) மொபைலின் நீள அகலத்திற்கு ஏற்றார் போல் மாறிக் கொள்ளும்.

Thursday, 4 February 2010

பார்வையற்றோருக்கு தனி வெப்சைட்

http://www.socialjustice.nic.in/
அரசின் சார்பிலும் பொதுத்துறை நிறுவனங்கள் சார்பிலும் சமூக விஷயங்கள் தொடர்பாக குறைந்தபட்சம் ஐயாயிரம் இணையதளங்கள் உள்ளன. நவீன தொழில் நுட்பம் வளர்ந்து விட்ட இப்போது கூட இவற்றில் ஒன்றேனும், உடல் ஊனமுற்றவர்களால் பயன்படுத்த முடியாத அளவில்தான் இருக் கின்றன. குறிப்பாக, கண்பார்வையற்றோர், நிறங்களை அடையாளம் காண இயலாதோர், மங்கலான பார்வை உடையோர் போன்றோர் இந்த இணையதளங்களைப் பார்க்க இயலாத நிலையில் தான் உள்ளன.
முதன்முறையாக சமூகநீதி மற்றும் அதிகாரத்துக்கான மத்திய அமைச்சகத்தின் இணையதளம் கண்பார்வையற்றோர் போன்றவர்களும் பயன்படுத்தக் கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. “ஊனமுற்றவர்களுக்கும் இணையதளங்களைப் பயன்படுத்தும் உரிமையுண்டு என்பதில் ஐயமில்லை’ என்கிறார் இத்துறையின் அமைச்சர் முகுல் வாஸ்னிக். “ஒரு அரசு இணையதளம் முதன் முறையாக இதுபோன்று இயங்குவதற்கு எனது துறையின் இணையதளம் வழிகாட்டியாக இருக்கிறது’ என்கிறார் அவர். படங்களுக்குப் பதில் மாற்று எழுத்து வடிவங்கள், மெதுவாகப் படிப்பவர்களின் வசதிக்காக எழுத் துக்களுக்கிடையில் போதுமான இடைவெளி, பெரிய வடிவ எழுத் துக்கள், தேவையான இணைப் புகள், வீடியோக்கள் என்பதாக அந்த இணையதளம் வடிவமைக்கப் பட்டுள்ளது. மவுஸ் பயன்படுத்த இயலாதவர்கள் முழுக்க முழுக்க கீபோர்டை மட்டுமே பயன்படுத்தலாம். கடந்த 2008, டிசம்பர் 3ம் தேதி, தங்கள் உரிமைகளை வலியுறுத்தி டில்லியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். இவர்களின் பிரதிநிதிகள், பிரதமர் அலுவலக அதிகாரிகளைச் சந்தித்து, தங்கள் குறைகளைத் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், அரசு இணையதளங்களை ஊனமுற்றோரும் பயன்படுத்தும் வகையில் சர்வதேச விதிகளின் அடிப்படையில் அமைக்கும்படி மத்திய தகவல் அமைச்சகத்தை பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டது. “இது நடந்து ஒரு ஆண்டுக்குப் பின், முதன்முறையாக இப்போதுதான் ஒரு அரசு இணையதளம் எங்களுக்கும் சேர்த்து உருவாகியிருக்கிறது. இணையதளங்கள் வைத்துள்ள அரசின் 50 துறைகளுக்கு எங்கள் கோரிக்கைகளைத் தெரிவித்திருந்தோம். அவர்களில் ஒருவரும் இதுவரை அதற்குப் பதில் அனுப்பியதில்லை’ என்கிறார் தேசிய ஊனமுற்றோருக்கான மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு மையத்தின் இயக்குனர் அபிதி.

Tuesday, 26 January 2010

சோழர் வரலாறு

சோழர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இரு குலங்கள் சேரர்களும் பாண்டியர்களும் ஆவர். சோழர் என்னும் பெயர் எவ்வாறு வழங்கத்தொடங்கியது என்பது தெரியவில்லை, சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடும்பம் அல்லது குலத்தின் பெயராகும் என்று பரிமேலழகரால் கருதப்பட்டது. சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவரும் சகோதரர்களே என்று கூறப்படுகின்றன. இது மரபு வழிச்செய்தி வரலாற்று ஆதாரமற்றது. இது எவ்வாறாயினும் சோழ அரச மரபின் மன்னர்களது ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளும், மக்களும் பண்டைக்காலம் முதலே இப்பெயராலேயே குறிப்பிடப்பட்டு வந்துள்ளனர். சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது. காவிரியின் பெருமையைப் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் புகழ்ந்து பாடுகின்றன.
சூரிய புத்திரர்களுக்காகவும் காந்தமன் என்ற மன்னனின் வேண்டுதலுக்காகவும் அகத்திய முனிவரின் கமண்டலத்திலிருந்து பிறந்ததே இக்காவேரி நதி என்று கூறப்படுகின்றது. நீதியைப் பேணீ வளர்த்த சோழ மன்னர்களின் குலக்கொடியாக விளங்கிய காவிரி, நீண்ட வறட்சிக் காலங்களிலும் அவர்களைக் கைவிடவில்லை. ஆண்டுதோறும் மழை பெய்து, காவிரியாறு பெருக்கெடுத்து ஓடும்போது மன்னன் முதல் சாதாரண உழவன் வரை சோழநாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுகூடி திருவிழாக் கொண்டினார்கள். கிறித்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சிற்றரசர் நிலைக்குத் தாழ்ந்து போயினர். பழைய சோழமண்டலப் பகுதிகளிலே, உறையூர், பழையாறு போன்ற இடங்களில் அவர்களது சிற்றரசுகள் நிலவின. கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் சோழர்கள் மீண்டும் வலிமை பெறத்தொடங்கினர். பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது. கி.பி இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் என வரலாற்று ஆய்வாளரினால் குறிப்பிடப்படுகின்றனர். முற்காலச் சோழர்களில் கரிகால் சோழன் புகழ் பெற்று விளங்கினான். 9 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர் பிற்காலச் சோழர் எனப்படுகின்றனர். இவர்களில், முதலாம் இராஜராஜ சோழனும், அவனது மகனான முதலாம் இராஜேந்திர சோழனும், இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மன்னர்களாவர்.
கி.பி பத்தாம், பதினோராம், பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில், சோழர் வலிமை மிகவும் உயர் நிலையில் இருந்தது. அக்காலத்தில் அந்நாட்டையாண்ட மன்னர்களில், முதலாம் இராஜராஜனும், முதலாம் இராஜேந்திரனும் முதன்மையானவர்கள். அவர்கள் காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது. இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் ஜாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது. இராஜராஜன், தென்னிந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதுடன், தெற்கே இலங்கையின் வடக்குப் பகுதியையும், மாலைத் தீவையும் கூடக் கைப்பற்றியிருந்தான். இராஜேந்திரன் காலத்தில் சோழர் படை வட இந்தியாவிலுள்ள கங்கைக் கரை வரை சென்று பாடலிபுத்திரத்தின் மன்னனான மகிபாலனைத் தோற்கடித்தது. அத்துடன் சோழரின் கடற்படை மலாய் தீபகற்பத்திலுள்ள கடாரம், ஸ்ரீவிஜயம் மற்றும் சில நாடுகளையும் தாக்கித் தோற்கடித்ததாகவும் தெரிய வருகிறது. இந்திய அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களே ஆவர்.
சோழர்களின் கொடி புலிக்கொடி. சோழர்களின் இலச்சினையான புலிச்சின்னம் அவர்களது கொடியிலும் பொறிக்கப்பட்டது. இப்புலிச் சின்னத்தைப்பற்றி பல இடங்களில் கூறும் இலக்கியங்கள், இதன் தோற்றத்தைப்பற்றி ஒன்றும் கூறவில்லை. அவர்கள் சூடும் மலர் ஆத்தி

Tuesday, 1 December 2009

இறைச்சியை அதிகம் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயம்.

தேகப்பயிற்சி செய்யும் மாணவர் புத்திக்கூர்மை அடைகிறார்கள்..
ஆட்டுக்கொத்து சாப்பிடும் தமிழருக்கு வருகிறது ஆபத்து..
இன்றைய டேனிஸ் பத்திரிகைகளில் இரண்டு செய்திகள் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அதில் முதலாவது இறைச்சியை அதிகம் சாப்பிடுவதால் புற்று நோய் அபாயம் 30 வீதம் அதிகமாக உள்ளது என்பதாகும். உலகப்புற்றுநோய் ஆய்வுக்கழகமான ( டபிள்யூ.சி.ஆர்.எப் ) ஐ மேற்கோள்காட்டி முதலாவது செய்தி வெளியாகியுள்ளது.
அதேபோல சுவீடனில் உள்ள உப்சாலா பல்கலைக்கழகத்தினரால் பேராசிரியர் ஜோர்ஜ் குன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இன்னொரு ஆய்வின் பிரகாரம் தேகப்பயிற்சியை சிறந்த முறையில் செய்யும் 15 – 18 வயதுள்ள மாணவர்கள் நுண்ணறிவில் சிறந்து விளங்குகிறார்கள் என்று தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு அறிக்கைகளோடு, கடந்த மூன்று மாதங்களாக வெளிவரும் மருத்துவ ஆய்வு அறிக்கைகளையும் ஒப்பிட்டு நோக்கினால் உணவில் சரியான ஒழுங்கமைப்பையும், அத்தோடு தேகப்பயிற்சியையும் சரியாக நெறிப்படுத்தினால் கண்டிப்பாக ஆரோக்கிய வாழ்வை அடையலாம் என்பதே இன்றைய ஐரோப்பாவின் முக்கிய குரலாக ஒலிப்பது தெரியவருகிறது.
உலகப் புற்றுநோய் ஆய்வுக்கழகமும், அமெரிக்கா புற்றுநோய் ஆய்வுக்கழகமும் சென்ற மார்ச் மாதம் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் சுமார் பத்து ஆண்டுகளுக்கு இறைச்சியை அதிகமாக உண்டு வந்தால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 30 வீதம் அதிகமாகும் என்று தெரிவித்துள்ளன. வாராந்தம் 1.100 கிராம் இறைச்சி சாப்பிடுவோரையும் அதேபோல வாரம் 150 கிராமிற்குக் குறைவாக இறைச்சி சாப்பிடுவோரையும் ஒப்பிட்டால் 1100 கிராம் சாப்பிடுவோருக்கு 30 வீதம் அதிக ஆபத்து என்றும் தெரிவிக்கின்றன. இறைச்சியால் பெருங்குடல், சிறுகுடல் இரண்டும் தாங்கமுடியாத களைப்படைந்து புற்று நோய்க்குள் விழுகின்றன.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அதிகமாக இறைச்சியை விரும்பி உண்போர் வாழும் முதலாவது நாடாக டென்மார்க் இருக்கிறது. மேலும் வருடாந்தம் 4000 டேனிஸ்காரர் பெருங்குடல் புற்றுநோய்க்கு உள்ளாவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் டேனிஸ் ஆரோக்கிய வாழ்விற்கான உணவு வரையறைப் பிரிவினர் வாரந்தம் சாப்பிட வேண்டிய இறைச்சியின் அளவு எத்தனை கிராம் என்பதை இன்றுவரை துல்லியமாக வரையறை செய்யவில்லை. எனினும் வாராந்தம் 500 கிராம் இறைச்சிக்கு மேல் வேண்டாம் என்பதே பொதுவான ஆலோசனையாக உள்ளது. இறைச்சியில் இரண்டுகால் பறவைகள், காலில்லாத மீன் இவைகளின் ஊன் (சதை) நாலுகால் விலங்குகளின் இறைச்சிகளோடு ஒப்பிட்டால் சிறந்தது.

இறைச்சி உணவு என்றதும் நேரடியான இறைச்சி மட்டுமல்ல லிவர்பூஸ்ரேக் எனப்படும் ஈரல்பசை, பூல்சர், பேர்கர் என்று சகலவகை இறைச்சி உப உணவுகளும் இதற்குள் அடங்கும். அதேவேளை பெருங்குடல் மட்டுமல்ல உடலின் பல பகுதிகளையும் பாதிக்கும் புற்று நோய்களுக்கு இவை காரணமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
அதேவேளை இப்படியான ஆய்வுச் செய்திகள் இறைச்சி விற்பனைத் தொழிலில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, இறைச்சி உண்போருக்கு விரக்தியையும் உண்டு பண்ணும். ஆகவே இரு தரப்பிலும் ஓர் அமைதியை ஏற்படுத்துமுகமாக டேனிஸ் விசேட வைத்திய நிபுணர் அனா ரியோனலான்ட் இன்னொரு கருத்தையும் முன்வைத்துள்ளார். பெருங்குடல் புற்றுநோய்க்கு இறைச்சி ஒன்றுதான் காரணமாக இருப்பதாகக் கூற முடியாது என்பது அவரது ஆறுதல் செய்தியாகும்.
அடுத்து சுவீடன் ஆய்வைப் பொறுத்தவரை கடந்த 1964 முதல் 1994 வரை கட்டாய இராணுவ சேவைக்கு அழைக்கப்பட்ட 1.2 மில்லியன் சுவீடிஸ் இளையோரின் நுண்ணறிவுத்திறனை மதிப்பீடு செய்து அறிக்கையைப் பார்த்தல் வேண்டும். இக்காலப்பகுதியில் கட்டாய இராணுவ சேவையில் சேர்க்கப்பட்டு கடும் தேகப்பயிற்சிகள் வழங்கப்பட்ட இளையோரில் பெரும்பான்மை சிறந்த நுண்ணறிவுடையோராக மிளிர்வதாக தெரிவிக்கிறது. எனவே இளவயதில் தேகப்பயிற்சி நோயற்ற வாழ்வுக்கு மட்டுமல்ல நுண்ணறிவுத் திறனை மேம்படுத்தும் என்றும் தெரிவிக்கிறது. பெற்றோர் 15 – 18 வயதுக்கிடைப்பட்ட மாணவரை பிரத்தியேக வகுப்பிற்கு அனுப்பி அறிவாளியாக்க முயல்வது மட்டும் போதியதல்ல, அதுபோல தேகப்பயிற்சிக்கும் அனுப்புவது அவசியமானது என்ற கருத்தையும் இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.
நிறையப் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் ஆடு பிடித்து இறைச்சியடித்து வாரத்தில் பல தடவைகள் சமைக்கும் பழக்கம் உடையோராக இருக்கிறார்கள். ஆட்டுக் கொத்துறொட்டி அடிக்கடி கடைகளில் சாப்பிட எண்ணுகிறார்கள். அதுபோல பிள்ளைகளுக்கு மக்டொனால்ஸ் உணவில் ஆர்வத்தையும் பல பெற்றோர் ஏற்படுத்துகிறார்கள். இவர்கள் அனைவரும் சிந்திக்க வேண்டிய விடயத்தை இந்த இரண்டு ஆய்வுகளும் தருகின்றன.