
தருமபுரியை அடுத்த ஈச்சம்பட்டியைச் சேர்ந்த பழனியப்பன், மல்லிகா தம்பதியரின் மகன் செந்தில் (28). 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.
இவர் சென்னையில் நடனப் பயிற்சியாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஆஸ்திரிய நாட்டின் அரசு விமானப் போக்குவரத்து தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றும் எலிசபெத் (25) சுற்றுலா பயணியாக இந்தியாவுக்கு அண்மையில் வந்தார்.
சென்னையில் செந்திலிடம் நடனப் பயிற்சி பெற்றபோது, இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ள தமது பெற்றோரிடம் சம்மதம் பெற்றனர்.
இதையடுத்து, செந்தில் குடும்பத்தினர் தமிழ் கலாசாரப்படி திருமணம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதற்கு எலிசபெத் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, தருமபுரி அருகேயுள்ள நல்லம்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது.