
உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார்.
அவருக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.
தென்கச்சி சுவாமிநாதன் அகில இந்திய வானொலியில் உதவி இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சி மூலம் வானொலி நேயர்களிடையே பிரபலமாக விளங்கினார். நல்ல கருத்துக்களை நகைச்சுவையான பாணியில் அவர் கூறி வந்தது அவருக்கு ஏராளமான வானொலி நேயர்களைப் பெற்றுத் தந்தது. கடந்த சில ஆண்டுகளாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'இந்த நாள் இனிய நாள்' என்ற நிகழ்ச்சி மூலம் பேசி வந்தார்.
இவர் சிறுகதைகளும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது ஆதரவாளர்களாலும் நேயர்களாலும் இவர் தென்கச்சி என்று அன்புடன் அழைக்கப்பட்டு வந்தார்.
1 comment:
'இன்று ஒரு தகவல்'புகழ் தென்கச்சி சுவாமிநாதனின் மறைவு தமிழுலகுக்கு ஓர் பேரிழப்பாகும், அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
Post a Comment