Wednesday 25 August, 2010

போனிவர்மா பிரகாஷ்ராஜூக்கு திருமணம்

Wednesday, 25 August 2010, பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பிரகாஷ்ராஜூம் அவரது மனைவி லலிதாகுமாரியும் விவாகரத்து பெற்று சமீபத்தில் பிரிந்தனர்.
பின்னர் இந்திப்பட டான்ஸ் மாஸ்டர் போனிவர்மாவுக்கும் பிரகாஷ்ராஜூக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் பொது நிகழ்ச்சிகளில் சேர்ந்து பங்கேற்றனர்.
இந்த நிலையில் பிரகாஷ் ராஜூக்கும் போனிவர்மாவுக்கும் மும்பையில் இன்று காலை 10.30 மணிக்கு திடீர் திருமணம் நடந்தது. அங்குள்ள மலாடு விளை யாட்டு மைய அரங்கில் திருமண நிகழ்ச்சிகள் நடந்தன. வேத மந்திரங்கள் ஓத இந்து முறைப்படி போனி வர்மாவுக்கு பிரகாஷ்ராஜ் தாலி கட்டினார். நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் இயக்குனர்கள் ராதாமோகன், குகன், விஜி, குமரவேலு மற்றும் கப்பார், வெங்கட் ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

Thursday 19 August, 2010

டாப் 10 உலகத் தலைவர்களில் மன்மோகனுக்கு முதலிடம்

அமெரிக்காவின் நியூஸ் வீக் இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் உலகின் டாப் 10 தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மன்மோகன் சிங் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இடம் பெறவில்லை.
உலக நாட்டு தலைவர்களின் ஆட்சியில் கல்வி, சுகாதாரம், தரமான வாழ்வு அளித்தல், பொருளாதாரம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு உலகின் சிறந்த தலைவர்களை தேர்வு செய்வதற்கான தலைவர்களை நேசிக்கும் தலைவர் என்ற தலைப்பில் கருத்தை மையமாக கொண்டு உலகில் உள்ள தலைவர்களை வரிசைப்படுத்தி தேர்வு செய்து அமெரிக்காவின் நியூஸ்வீக் பத்திரிகை கணித்து அறிவித்து உள்ளது.
இதில் மன்மோகன் சிங்குக்கு முதலிடத்தைக் கொடுத்துள்ளது நியூஸ் வீக். 2வது இடம் இங்கிலாந்தின் புதிய பிரதமர் டேவிட் காமரூனுக்கும், 3வது இடம், மாலத்தீவு அதிபர் முகம்மது நஷீத்துக்கும் கிடைத்துள்ளது.
மன்மோகன் சிங்குறித்து நியூஸ்வீக் கூறுகையில், முன்னாள் பொருளாதார நிபுணரான பிரதமர் மன்மோகன் சிங், 21வது நூற்றாண்டின் மிக வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக இந்தியாவை மாற்றியவர். தேங்கிக் கிடந்த சோஷலிச இந்தியாவிலிருந்து உலகப் பொருளாதார சக்தியாக இந்தியாவை மாற்றியவர்.
இந்தியாவின் இந்த மிகப் பெரிய மாற்றத்திற்கு மன்மோகன் சிங் மட்டுமே தனிப் பொறுப்பாவார். அவரது திறமையும், செயல்பாடுமே இதற்கு முக்கியக் காரணம். உலகளாவிய தலைவர்கள் மத்தியில் தனித்து தெரிகிறார் மன்மோகன் சிங்.
ஊழலற்ற, எளிமையான தலைவராக விளங்கி வருவது அவரது தனிச் சிறப்பு. ஒரு உலகத் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மன்மோகன் சிங் தான் சரியான உதாரணம் என்று முன்னாள் சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் இயக்குநர் எல்பராதே கூறியது குறிப்பிடத்தக்கது என்று புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் பிரெஞ்சு அதிபர் சர்கோஸி, 5வது இடத்தில் சீனப் பிரதமர் வென் ஜியாபோ ஆகியோர் உள்ளனர்.
உலகத் தலைவர்கள் பட்டியலில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இடம் பெறாதது வியப்பளிக்கும் வகையில் உள்ளது.இதேபோல உலகின் 100 சிறந்த நாடுகள் வரிசையில் இந்தியாவுக்கு 78வது இடம் கிடைத்துள்ளது.