Thursday 23 December, 2010

கேரள முன்னாள் முதல்வர் கருணாகரன் காலமானார்.

நீண்ட நாட்கள் நோய்வாய்பட்டிருந்த கேரள முன்னாள் முதல்வர் கருணாகரன் இன்று காலமானார்.
கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கருணாகரன்(93) , நீண்ட நாட்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 10 ஆம் தேதியன்று அவருக்கு திடீரென்று ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக திருவனந்தபுரம் மருத்துவமனையில் சேர்க்கபட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களாக உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது.
இநநிலையில் நேற்று மீண்டும் அவரது உடல்நிலை ஆபத்தான நிலைக்கு சென்றதாகவும், இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று மாலை மரணமடைந்தார்.
கேரள முதல்வராக நான்கு முறை பதவி வகித்தவர் கருணாகரன் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பலர் ஆழ்ந்த இரங்கல் வெளியிட்டுள்ளனர்.

Friday 10 December, 2010

சீமான் இன்று விடுதலையானார்

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து வேலூர் சிறையில் இருந்து நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் இன்று விடுதலையானார்.
சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய சீமானை, இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் கூறி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்தது.
இதனை எதிர்த்து சீமான் சகோதரர் ஜேம்ஸ் பீட்டர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் தர்மராவ், ஹரிபரந்தாமன் ஆகியோர், சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்த உத்தரவை ரத்து செய்தனர்.
இதனையடுத்து வேலூர் சிறையில் இருந்து சீமான் இன்று விடுதலை செய்யப்பட்டார். அவரை வரவேற்க பெரும் திரளான தொண்டர்களும், நடிகர்களும், இயக்குனர்களும், தலைவர்களும் வேலூர் சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர்.

Sunday 5 December, 2010

மழையால் எங்கும் தண்ணீர் - ஊரப்பாக்கம்

என் வீட்டை சுற்றி தண்ணீர் ஓடுகிறது..