Saturday 31 October, 2009

திரு‌ப்ப‌தி ஏழுமலையா‌ன் கோ‌யி‌லி‌ல் வரு‌ம் டிச‌ம்ப‌ர் 31ஆ‌ம் தே‌தி இரவு ச‌ந்‌திர ‌கிரகண‌ம் ‌நிக‌ழ்வதா‌ல், ஆ‌ங்‌கில‌ப் பு‌த்தா‌ண்டு ‌பிற‌ப்‌பி‌ன்போது ‌கோ‌யி‌ல் நடை சா‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
ஒவ்வொரு ஆ‌ண்டு‌ம் டிச‌ம்ப‌ர் 31ஆ‌ம் தே‌தி இரவு 12 ம‌ணி‌க்கு மே‌ல் ஆங்கிலப் புத்தாண்டு‌ப் ‌பிற‌ப்பையொ‌ட்டி ஒ‌வ்வொரு கோ‌யி‌ல்க‌ளிலு‌ம் ‌சிற‌ப்பு பூஜைக‌ள் நட‌த்த‌ப்படுவது வழ‌க்க‌ம்.
அதிலும் உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். அன்று இரவு முதலே கோவிலுக்கு வந்து நள்ளிரவு 12 மணிக்கு பிறகு ஏழுமலையானை தரிசனம் செய்தால் ஆண்டு முழுவதும் நன்றாக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
ஆனால் வருகிற ஆங்கிலப் புத்தாண்டு அன்று இரவு ச‌ந்‌திர ‌கிரகண‌ம் ‌நிக‌ழ்வதா‌ல் திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்படும் என்று கோவில் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கோவிலின் தேவஸ்தான அதிகாரி கூறுகையில், `ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் ச‌ந்‌திரக ‌கிரகண‌ம் வருகிறது. இதனால் இந்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி மாலை 7 மணிக்கு கோவில் மூடப்படும். மறுநாள், ஜனவரி 1-ந் தேதி காலை 7 மணிக்கு‌த்தா‌ன் கோவில் திறக்கப்படும். கிரகணம் முடிந்த பிறகு ஆலயத்தை தூய்மைப்படுத்தி பரிகார பூஜைகள் முடிந்த பிறகு வழக்கம் போல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்' என தெரிவித்தார்.
எனவே இ‌ந்த ஆ‌ண்டு ஆ‌ங்‌‌கில‌ப் பு‌த்தா‌ண்டை ‌திரு‌ப்ப‌தி‌யி‌ல் கொ‌ண்டாட வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நினை‌த்தவ‌ர்க‌ள் பெரு‌ம் ஏமா‌ற்ற‌த்‌தி‌ற்கு‌ள்ளா‌கி‌யிரு‌க்‌கி‌ன்றன‌ர்.

Thursday 29 October, 2009

கிரிக்கெட் நடுவர் டேவிட் ஷெப்பர்டு மரணம்

லண்டன், அக்.29 (டிஎன்எஸ்) - இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல முன்னாள் சர்வதேச கிரிக்கெட் நடுவர் டேவிட் ஷெப்பர்டு அக்டோபர் 28ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 68.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட காலம் சிகிச்சை பெற்று வந்த அவரது உயிர் நேற்று பிரிந்தது.
டேவிட் ஷெப்பர்டு 1983ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை 172 ஒரு நாள் போட்டி மற்றும் 92 டெஸ்ட் போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றி இருக்கிறார். இதில் 1996, 1999, 2033ஆம் ஆண்டுகளில் உலக கோப்பை போட்டி இறுதி ஆட்டமும் அடங்கும்.
282 முதல் தர போட்டியில் விளையாடி உள்ள ஷெப்பர்டு 1981ஆம் ஆண்டில் முதல் தர போட்டியில் நடுவராக நியமிக்கப்பட்டார். 2005ஆம் ஆண்டில் சர்வதேச நடுவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

Friday 9 October, 2009

ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள்து.
அணு ஆயுத பரவலை தடுக்க வேண்டும் என்று உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்து, அது தொடர்பான முயற்சிகளை மேற்கொண்டு வருவதற்காகவும், உலக அமைதிக்காக பாடுபட்டு வருவதற்காகவும் 2009 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அதிபர் பதவியை வகிக்கும் முதல் ஆப்ரிக்க - அமெரிக்கரான ஒபாமா, அணு ஆயுத ஒழிப்புக்கு குரல் கொடுத்துவருவதோடு,அமெரிக்க அதிபராக தாம் பதவியேற்றதிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளில் நின்றுபோய் இருக்கும் அமைதி பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்காகவும் பாடுபட்டு வருகிறார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஒரு ஆண்டுக்கும் குறைவான காலக்கடத்திற்குள்ளாகவே, உலக அரங்கில் அசாதாரணமான அளவில் இராஜ்ஜிய நடவடிக்கைகளை பலப்படுத்தி வருவதாகவும், மக்களிடையே ஒத்துழைப்பு நிலவ முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் அமைதிக்கான நோபல் பரிசு தேர்வுக் கமிட்டி ஒபாமாவை பாராட்டியுள்ளது.

Wednesday 7 October, 2009

நோபல் பரிசை வென்ற 3வது தமிழர் வெங்கி!

சென்னை: நோபல் பரிசைப் பெற்ற 3வது தமிழர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் வெங்கி ராமகிருஷ்ணன் எனப்படும் வெங்கடராமன் ராமகிருஷ்ணன்.
தமிழகத்தின் சிதம்பரத்தில் பிறந்தவர் ராமகிருஷ்ணன்.
1971ம் ஆண்டு இயற்பியலில் பிஎஸ்சி முடித்த இவர் 1976ம் ஆண்டு பரோடா பல்கலைக்கழகத்தி்ல் டாக்டர் பட்டம் பெற்றார்.
இயற்பியல் பயின்றவர் என்றாலும் உயிரியல் துறையிலும் பெரும் மூளை கொண்ட ராமகிருஷ்ணன், அந்தத் துறையில் காலடி எடுத்து வைத்தார். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உயிரியல் பிரிவு பேராசிரியராக பணியாற்றிய இவர் செல்கள் தொடர்பான தனது ஆராய்ச்சிகளை துவக்கினார்.
இப்போது லண்டனின் எம்ஆர்சி மாலிகுலார் பயாலஜி ஆய்வகத்தில் தலைமை விஞ்ஞானியாக உள்ள இவர் நோபல் பரிசை வென்றுள்ளார்.
இதற்கு முன்பு சர். சந்திரசகேர வெங்கட்ராமன் (சர். சி.வி. ராமன்) 1930ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். புகழ் பெற்ற ராமன் விளைவுக்காக அவருக்கு இந்தப் பரிசு கிடைத்தது.
இதைத் தொடர்ந்து 1983ம் ஆண்டு இயற்பியல் பிரிவில் சுப்பிரமணியன் சந்திரசேகர் நோபல் பரிசைப் பெற்றார். இவர் சர்.சி.வி.ராமனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 2009ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசை வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் வென்றுள்ளார்.
வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் தற்போது அமெரிக்க குடிமகனாக இருப்பதால் அமெரிக்கராகத்தான் கருதப்படுவார்.
இந்தியாவில்...
இந்தியாவில் இதுவரை ரவீந்திர நாத் தாகூர், சர் சி.வி. ராமன், ஹர்கோபிந்த் சிங் குராணா, சுப்ரமணியன் சந்திரசேகர், அன்னை தெரசா, அமார்த்யா சென், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஆகியோர் நோபல் பரிசினை வென்றுள்ளனர்.

Tuesday 6 October, 2009

சோழவந்தான் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு - 4 பேர் பலி

மதுரை, திண்டுக்கல் இடையே உள்ள ஊர் சோழவந்தான். இங்குள்ள ரயில் நிலையத்தில், இன்று மாலை 6.05 மணிக்கு ஈரோடு - நெல்லை ரயில் வந்து நின்றது.
வந்து நின்று சில நிமிடங்களுக்குள் ரயில் நிலையத்தில் பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது. வெடித்த வேகத்தில் அங்கு ரயிலுக்காக காத்திருந்த 2 ஆண்கள் உடல் சிதறி பலியானார்கள். மேலும் ரயில் நிலையத்தின் மேற்கூரை நாலாபக்கமும் சிதறி நொறுங்கி விழுந்தது.
பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்ததால் ரயில் நிலையத்தில் பெரும் அமளி ஏற்பட்டது. ஈரோடு - நெல்லை ரயிலில் இருந்த பயணிகள், ரயிலிலிருந்து அலறி அடித்துக் கொண்டு இறங்கி ஓடினர்.
குண்டுவெடிப்பில் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் ஆறுமுகம் உள்பட பலர் படுகாயமடைந்தனர். அவர்களை ஆம்புலன்கள் மூலம் போலீஸார், மதுரை அரசு ராஜாஜி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் குண்டுவெடிப்பில் காயமடைந்த மேலும் 2 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்று தெரியவில்லை. ஏற்கனவே ரயில்வே நிலையத்தில் குண்டு வைக்கப்பட்டிருந்ததா அல்லது கிணறு தோண்ட அல்லது குவாரியில் பாறைகளை உடைக்கப் பயன்படும் ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததா என்று தெரியவில்லை.
காவல்துறை தரப்பில் கூறுகையில், என்ன மாதிரியான குண்டுவெடிப்பு என்று விசாரணைக்குப் பின்னர்தான் தெரிய வரும். இருப்பினும் தீவிரவாத செயலாக இது இருக்க வாய்ப்பில்லை என்றனர்.
குண்டுவெடிப்புக்கு சற்று முன்னர் வந்து நின்ற நெல்லை பாசஞ்சர் ரயிலில் குண்டுகள் ஏதேனும் உள்ளதா என்று தீவிர சோதனை நடத்தப்பட்டது. அந்த ரயிலை நிலையத்திலிருந்து கொண்டு செல்லாமல் நிறுத்தி வைத்துள்ளனர்.
ரயில்வே போலீஸார், உள்ளூர் போலீஸார் விசாரணையில் இறங்கியுள்ளனர். ரயில் வே மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சோழவந்தான் விரைந்துள்ளனர்.

Monday 5 October, 2009

டால்பின் - இந்தியாவின் தேசிய நீர் விலங்காக அறிவிப்பு

டெல்லி: இந்தியாவின் தேசிய நீர் விலங்காக டால்பின் அறிவிக்கப்பட்டுள்ளது. அரிதாகி வரும் இந்த விலங்கினத்தைக் காப்பாற்றும் நோக்கில், இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூறுகையில், தேசிய விலங்காக புலியும், தேசியப் பறவையாக மயிலும் உள்ளதைப் போல, டால்பின் தேசிய நீர் விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆறுகள், குறிப்பாக கங்கையின் ஆரோக்கியத்திற்கு டால்பின்களின் சேவை மிகப் பெரியது.
இதுதொடர்பான முடிவு, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த தேசிய கங்கை ஆற்றுப் படுகை ஆணையக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
டால்பினை தேசிய நீர் விலங்காக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பீகார் முதல்வர் நிதீஷ் குமார்தான் முன்வைத்தார். அவரது கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுள்ளது என்றார்.

Friday 2 October, 2009

டோங்காவில் மீண்டும் நிலநடுக்கம்-சுனாமி பலி 189 ஆக உயர்வு

சமாவோ தீவுக்கு அருகே இருக்கும் டோங்கா தீவு பகுதியில் இன்று மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானது. நேற்று முன்தினம் ஏற்பட்ட சுனாமிக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 189 ஆக உயர்ந்துள்ளது.
நியூசிலாந்துக்கு கிழக்கே பசிபிக் பெருங்கடல் பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தால் சுனாமி ஏற்பட்டது. இதில் சமாவோ தீவு கடும் பாதிப்புக்கு ஆளானது.
சமாவோ தீவில் இதுவரை 149 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அமெரிக்கன் சமாவோவில் 31, டோங்காவில் 9 பேர் இறந்துள்ளனர். மொத்தமாக சுனாமிக்கு 189 பேர் பலி யாகியுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் 100க்கும் மேற்பட்ட மக்களை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் சமாவோ தீவு மக்களில் பெரும்பான்மையினர் அங்கிருக்கும் மலை பகுதியிலே வசித்து வருகின்றனர். மீண்டும் சுனாமி வந்துவிடுமோ என்ற அச்சத்தில் கடற்கரை பகுதிகளிலிருந்த இருக்கும் தங்களது வீடுகளுக்கு திரும்ப மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் இன்று காலை தெற்கு டோங்கா பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவானது.