Wednesday, 29 July, 2009

பிரபல மலையாள நடிகர் ராஜன் பி.தேவ் காலமானார்

ஜூலை.29: சிறிதுகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த பிரபல மலையாள நடிகர் ராஜன் பி.தேவ் இன்று அதிகாலை கொச்சியில் காலமானார். அவருக்கு வயது 58.

ராஜன் தேவ் கல்லீரல் கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது இறுதிச்சடங்கு அங்காமலையில் உள்ள செயின்ட் சேவியர் சர்ச்சில் வியாழக்கிழமை காலை நடைபெறுகிறது.


ஆலப்புழா மாவட்டம் சேர்தலாவில் பிறந்த தேவ், 1980ல் சிறுசிறு வேடங்களுடன் தனது திரைவாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் வில்லன் வேடத்தில் நடித்து புகழ்பெற்றார். ஏறத்தாழ 30 ஆண்டுகளாக சினிமாவில் நடித்துவந்த தேவ், இதுவரை தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் சுமார் 180 படங்களில் நடித்துள்ளார்.

Tuesday, 28 July, 2009

ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ராஜிநாமா

ஜூலை 28: ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா இன்று தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதற்கான கடிதத்தை அவர் ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளார்.
சோபியான் படுகொலைகள் தொடர்பாக சட்டப் பேரவையில் நேற்று பெரும் அமளி நிலவியது.
இன்று வேறொரு விவகாரத்தால் அவை கொந்தளித்தது. இளம் பெண்களையும் சிறுமிகளையும் மிரட்டி விபசாரத்தில் ஈடுபடுத்தி அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள், சரணைடந்த பயங்கரவாதிகளிடம் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
இன்று அவை தொடங்கியதும் இந்தப் பாலியல் மோசடி விவகாரத்தில் முதல்வர் உமர் அப்துல்லாவுக்குத் தொடர்பு இருப்பதாக முன்னாள் துணை முதல்வரும் பிடிபி மூத்த தலைவருமான முஸாபர் பெய்க் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து, கடும் உணர்ச்சிவசப்பட்டவரான உமர், இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை தம்மால் சகித்துக் கொள்ள முடியாது எனவும் தம்மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும்வரை தம்மைக் குற்றவாளி எனக் கருதமுடியாது எனவும் அவர் கூறினார்.இதை ஏற்காத எதிர்கட்சியினர், இந்த வழக்கில் 102-வது குற்றவாளியாக உமர் பெயர் இருப்பதாகக் கூறினர். இதையடுத்து, ராஜிநாமா செய்யப் போவதாக உமர் தெரிவித்தார்.
தம்மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை என்பது எனக்குத் தெரியும். எனினும், தாம் நிரபராதி என நிரூபிக்கும்வரை தாம் பதவியில் இருக்க விரும்பவில்லை என்றார் அவர்.இவ்வாறு உமர் பேசியதும், அவை கொந்தளித்தது. கடும் அமளி ஏற்பட்டது. எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் உமரை சமாதானம் செய்ய முயன்றனர். அவரது ராஜிநாமாவை கட்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது எனக் கூறினர். இதை ஏற்காத உமர் தொடர்ந்து அவர்களுடன் வாக்குவாதம் செய்தார்.

Monday, 27 July, 2009

ஆஸ்திரேலியாவில் இந்திய பெண் பத்திரிகையாளர் மீது தாக்குதல்

ஜூலை 27- ஆஸ்திரேலியாவில் இந்தியாவைச் சேர்ந்த பெண் செய்தியாளர் ஒருவர் மிரட்டப்பட்டதுடன் அவர் மீது தாக்குதலும் நடைபெற்றுள்ளது.
வெளிநாட்டு மாணவர்களின் குடியேற்றம் மற்றும் கல்வி தொடர்பான விவகாரத்தில் ஊழல் நடைபெற்றதாக அவர் தான் பணியாற்றும் ""ஏபிசி டி.வி."" என்னும் தொலைக்காட்சிக்கு செய்தி அளித்திருந்தார்.
வெளிநாட்டு மாணவர்களுக்கான ஆங்கிலத் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவும், போலியான பணிச் சான்றிதழ் பெறவும் 2 ஏஜென்டுகள் மூலம் சம்பந்தப்பட்ட அரசுத்துறைகளை அணுகினார். இதில், 3000 அமெரிக்க டாலர்கள் முதல் 5000 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வரை செலுத்தினால் அத்தகைய சான்றிதழ்களைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த புலனாய்வுச் செய்தி ஏபிசி டி.வி.,யில் அண்மையில் வெளியானது.
இதையடுத்து அந்த பெண் செய்தியாளரை சிலர் மிரட்டியதாகவும் அவர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்தியாவைச் சேர்ந்த பெண் செய்தியாளர் ஒருவர் தாக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

ஜூலை 26: உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட முதலாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை பிரதமர் மன்மோகன் சிங் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். "ஐஎன்எஸ் அரிஹந்த்' என்ற இக்கப்பல், விசாகப்பட்டினத்தில் உள்ள கப்பல் கட்டும் துறைமுகத்திலிருந்து கடற்படையிடம் முறைப்படி வழங்கப்பட்டது. கார்கில் வெற்றியின் 10-ம் ஆண்டு விழாவில் பங்கேற்ற பிரதமர், தனது மனைவியுடன் தனி ஹெலிகாப்டரில் விசாகப்பட்டினம் வந்தார். பிரதமரின் மனைவி குர்ஷரண் கெüர், தேங்காய் உடைத்து கப்பலை முறைப்படி தொடக்கிவைத்தார்.
6 ஆயிரம் டன் எடை கொண்ட இக்கப்பலின் நீளம் 110 மீட்டர், அகலம் 11 மீட்டர். இதற்கான செலவு ரூ.30 ஆயிரம் கோடி. இக்கப்பலை கட்டிமுடிக்க 20 ஆண்டுகள் ஆனது. ரஷியாவின் சார்லி அணுசக்தி கப்பலைப் போன்று தோற்றமுடைய ஐஎன்எஸ் அரிஹந்த், முதல் இரண்டு ஆண்டுகள் கடலில் முன்னோட்டம் பார்க்கப்படும். பின்னர் முழுவதுமாக பணியில் ஈடுபடுத்தப்படும்.
இக்கப்பலில் 12 கே-15 வகை ஏவுகணைகள் இடம்பெற்றுள்ளன. இவை ஒவ்வொன்றும் 500 கிலோ எடைகொண்டது. சுமார் 750 கி.மீ. தூரம் இலக்கை தாக்கவல்லது. இக்கப்பலில் கடற்படை வீரர்கள் 95 பேர் உள்ளனர்.
விழாவில் பங்கேற்று பிரதமர் பேசியதாவது: உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட முதலாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது பெரிய சாதனையாகும். அணுசக்தி நீர்மூழ்கி கப்பலைத் தயாரிக்கும் உலக நாடுகளுடன் (அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் சீனா) நாமும் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது பெருமையளிக்கிறது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, கடற்படை தளபதி சுரேஷ் மேத்தா, ஆந்திர பிரதேச முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Thursday, 23 July, 2009

விடுதலைப் புலிகள் தலைவராக செல்வராஜா பத்மநாதன் நியமனம்

ஜூலை 21: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ தலைவராக செல்வராஜா பத்மநாதன் என்ற குமாரன் பத்மநாதன், செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
"கே.பி.' என்று அழைக்கப்படும் இவர் புலிகளுக்கு சர்வதேச அளவில் நிதி திரட்டுவது மற்றும் ஆயுங்களை கொள்முதல் செய்து தருவது போன்ற பணிகளை மேற்கொண்டு வந்தார். தற்போது பிரபாகரனுக்கு அடுத்தபடியாக இவர் புலிகள் இயக்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் இந்த அறிக்கை எங்கிருந்து வெளியிடப்பட்டது என்பது தெரியவில்லை.


Tuesday, 21 July, 2009

அச்சமுண்டு அச்சமுண்டு - விமர்சனம்

Movie - Achchamundu Achchamundu
Director - Arun Vaidyanathan
Music - Karthik Raja
Cast - Prasanna, Sneha, John Shea
Rate -
இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் அதிகம் நடைபெறுகின்றன என்பதை சொல்ல வந்திருக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்களின் தமிழ்படம்!
கதைப்படி, அமெரிக்கா - நியூஜெர்சி புறநகர் பகுதியில் வசிக்கும் தமிழ்குடும்பம் பிரசன்னா- சினேகாவினுடையது. தங்களது செல்லமகள் அக்ஷயாதினேஷுடன் வசிக்கும் அவர்கள் வீட்டிற்குள் பெயிண்டர் ரூபத்தில் அடியெடுத்து வைக்கிறான் குழந்தை பாலியல் கொடூரம் புரியும் அமெரிக்கன்- வில்லன் ஜான்ஷே! அமெரிக்கன், இந்தியன், தமிழன் என்ற பாகுபாடில்லாமல் பல குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து கொள்ளும் ஜான்ஷே, பிரசன்னாவின் பெண் குழந்தை அக்ஷயாவையும் அடையத்துடிக்கிறான். அவனது ஆசை வென்றதா? அல்லது அவனை பிரசன்னா கொன்றாரா? என்பது மீதிக்கதை!
மேக்கப்பும், மீசையும் இல்லாமல் பிரசன்னா அமெரிக்காவாழ் தமிழராகவே அசத்தியிருக்கிறார். குழந்தை மீதான பாசத்திலும் சரி, மனைவி சினேகா மீதான காதலிலும் சரி நடிப்பில் வெளுத்து வாங்கி இருக்கிறார். வில்லனுடன் மோதி குழந்தையை காப்பாற்றும் காட்சிகளில் கூட பிரசன்னா புதிய பரிமாணம் காட்டி பிரமிப்பூட்டுகிறார். கீப் இட் அப்! சினேகாவும் பிரமாதம்!
பிரசன்னா - சினேகா இருவரையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறார் அமெரிக்க வில்லன் ஜான்ஷே என்றால் மிகையல்ல. குழந்தைகள் மீது அப்படி ஒரு விரகதாபம் கொள்வதாக நடிக்க ஜான் ஷாவால் மட்டுமே முடியும்! என சொல்ல வைத்து விடுகிறார் இந்த ஹாலிவுட் நடிகர். குழந்தை நட்சத்திரம் அக்ஷயாதினேஷûம் பிறற அமெரிக்கா வாழ் இந்தியர்களும்கூட பேஷ் பேஷ் சொல்ல வைத்து விடுகின்றனர்.
கிரிஸ் ப்ரெய்லிச்சின் "ரெட் ஒன்' காமிரா ஒளிப்பதிவும், கார்த்திக் ராஜாவின் இசையும் படத்திற்கு பலம் என்றாலும் முழுக்க முழுக்க அமெரிக்க பின்னணி சற்றே பலவீனம். அதுவும் இந்தியாவில் குழந்தை பாலியல் கொடூரங்கள், குற்றங்கள் ஜாஸ்தி எனக் க்ளைமாக்ஸில் கூற முழுக்க முழுக்க அமெரிக்காவிலேயே படம் எடுத்திருப்பது "அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தை அந்நியப் படுத்துகிறதென்றால் மிகையல்ல!
அருண் வைத்யநாதனின் எழுத்தும் இயக்கமும் ஒரு "ஏ' கிளாஸ் பிரச்னையை பி.சி. சென்டருக்கும் புரிய வைக்க முயற்சித்துள்ளன என்றால் மிகையல்ல! ஆனால், அதற்கான களம் அமெரிக்காவாக இருப்பது சில இடங்களில் பலம்! பல இடங்களில் பலவீனம்!! மொத்தத்தில் "அச்சமுண்டு அச்சமுண்டு' உலகத்தில் மனிதர்கள் "இப்படியும் உண்டு! என குழந்தை பாலியல் கொடூரர்களை அடையாளப்படுத்தி அறை கூவல் விடுத்துள்ளது!

விமானநிலையத்தில் கலாமிடம் பாதுகாப்பு சோதனை: விசாரணைக்கு உத்தரவு

புதுதில்லி, ஜூலை.21: தில்லி இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தில் அமெரிக்க விமான நிறுவனத்தால் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 24 அன்று அமெரிக்கா செல்லும் கான்டினென்டல் ஏர்லைன்ஸ் விமானத்தில் கலாம் ஏறுவதற்கு முன்பு அவ்விமான பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் சாதாரண பயணியைப் போல சோதனை நடத்தியதாக கலாமுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
கலாம் இவ்விவகாரத்தை அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லவில்லை. எனினும் தற்போது இவ்விவகாரம் வெளியே வந்துள்ளதையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்த விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்புக்கு உத்தரவிட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரபுல் படேல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
'இப்போதுதான் இச்சம்பவம் குறித்து எனக்குத் தெரியவந்தது. இதில் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும், சம்மந்தப்பட்டவர்களை மன்னிப்புக் கேட்குமாறும் கூற உள்ளோம்' என்றார் அவர்.
இந்நிலையில், அவ்விமான நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி அபர்ணா கூறுகையில், இது விமான பாதுகாப்பின் வழக்கமான சோதனைதான் என்றும் விஐபி மற்றும் விவிஐபிக்களுக்கு என சிறப்பு விதிகள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Thursday, 9 July, 2009

கிரிக்கெட் நிர்வாகியாகிறார் கங்குலி

மும்பை, ஜூலை 8: விளையாடுவதிலிருந்து ஓய்வு பெற்றாலும், கிரிக்கெட்டுடன் தொடர்ந்து தொடர்பு வைத்துக் கொள்ள விரும்புகிறேன் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் செüரவ் கங்குலி தெரிவித்தார்.
புதன்கிழமை தனது 37-வது பிறந்த நாளைக் கொண்டாடிய கங்குலி கூறியதாவது: சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாடுவதை 6 மாதங்களுக்கு முன் நிறுத்தி விட்டேன். ஆனால், கிரிக்கெட்டுடன் தொடர்ந்து தொடர்ந்து தொடர்பு வைத்திருப்பேன்.

மேற்கு வங்கத்தில் ஏராளமான திறமை உள்ளது. அது குறித்து கவனம் செலுத்த விரும்புகிறேன். பிசிசிஐ பொறுப்புகள் குறித்து கவனம் செலுத்தவில்லை. ஒரு நேரத்தில் ஓரடி மட்டுமே எடுத்து வைக்க விரும்புகிறேன். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாது.
டால்மியாவுக்கு எதிராக...: பெங்கால் கிரிக்கெட் வாரியத் தேர்தலில் தற்போதைய தலைவராக உள்ள ஜக்மோகன் டால்மியாவுக்கு எதிராக கங்குலியை நிறுத்த டால்மியாவின் எதிரணி திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
பிசிசிஐ தலைவராக...: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவி 2014-ல் கிழக்கு மண்டலத்துக்கு என ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கும் கங்குலி முயற்சி செய்யக் கூடும் என்ற கருத்து எழுந்துள்ளது. ஆனால், பிசிசிஐ தலைவராக ஆக வேண்டும் எனில், வாரியத்தின் வருடாந்திர பொதுக் குழுவில் குறைந்தது 2 முறையாவது கங்குலி கலந்து கொண்டிருக்க வேண்டும்.
டால்மியா கருத்து: "பெங்கால் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிக்கு கங்குலி போட்டியிடப் போவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. சர்ச்சையை உருவாக்கவே இது போன்ற செய்திகள் பரப்பப்படுகின்றன' என டால்மியா தெரிவித்தார்.
இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனான கங்குலி 113 டெஸ்டுகளில் 7,212 ரன்களும் (சராசரி 42.17 ரன்), 311 ஒருதின ஆட்டங்களில் 11,363 ரன்களும் (சராசரி 41.02) குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, 7 July, 2009

கரீபிய மண்ணில் தொடரை வென்றது இந்தியா (2-1)

உலககோப்பை வீழ்ச்சிக்குப் பின், கரீபிய மண்ணில் எழுச்சி கண்டுள்ளது இந்திய அணி. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று அசத் தியுள்ளது. கேப்டன் தோனி, யுவராஜ் சிங்கின் அபார ஆட்டம், இந்தியா தொடரை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தது. வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது.
முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி, 2-1 என முன்னிலை பெற்றது. 4வது போட்டி நேற்று முன் தினம் செயின்ட் லூசியாவில் நடந்தது. மழையின் காரணமாக வெறும் 7.3 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் இந்திய அணி தொடரை வென்றது. இதன் மூலம் கரீபிய மண்ணில் 2வது முறையாக ஒரு நாள் தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி. இதற்கு முன் சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி கடந்த 2002 ம் ஆண்டு முதல் முறையாக வெஸ்ட் இண்டீசில் சாதித்திருந்தது.
ஒரு நாள் தொடரில் இந்திய அணியின் வெற்றி நடை தொடர்கிறது. கடந்த 2008 ம் ஆண்டு முதல் தொடர்ச் சியாக ஐந்து ஒரு நாள் தொடர்களில் கோப்பை (எதிர்-இலங்கை (2008), இங்கிலாந்து (2008), இலங்கை (2009), நியூசிலாந்து (2009), வெஸ்ட் இண்டீஸ் (2009)வென்று அசத்தியுள்ளது.

Monday, 6 July, 2009

மக்களவையில் பட்ஜெட் தாக்கல் 2009-10

நாடாளுமன்ற மக்களவையில் 2009-10 ம் நிதியாண்டுக்கான் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்.
வேளாண் துறையில் 4% சதவீத வளர்ச்சியை எட்ட உறுதி.
2014-ம் ஆண்டுக்குள் நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்க நடவடிக்கை.
அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு முக்கியத்துவம்.
ஆண்டுக்கு 1.2 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கத் திட்டம்.
ஆரம்பர சுகாதாரத்துறை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
9% வளர்ச்சியை எட்டுவதற்குத் தீவிர முயற்சி.
அன்னிய மூலதன வரவுகள் அதிகரிக்கப்பட வேண்டும்.
சமூக நலத் திட்டங்களுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு.
பெட்ரோலியப் பொருள்களின் விலையை நிர்ணயம் செய்ய நிபுணர் குழு அமைக்கப்படும்.
தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்படும்.
விவசாயிகளுக்கு 7% வட்டியில் ரூ.3 லட்சம் வரை கடன். உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்துவோருக்கு சலுகை வட்டியில் கடன்.
அரசு, தனியார் ஒத்துழைப்புடன் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அமைக்கத் திட்டம்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு 144% அதிகரிப்பு.
ஜவாஹர்லால் நேரு நகர புனரமைப்புத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு 80 % அதிகரிப்பு.
இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.
ஏழைக் குடும்பங்களுக்கு ரூ. 3 விலையில் 25 கிலோ அரிசி அல்லது கோதுமை.
பாரத் நிர்மாண் திட்ட ஒதுக்கீடு 45% அதிகரிப்பு.
ஆறுகள் மற்றும் ஏரிகள் பாதுகாப்புக்காக ரூ.562 கோடி ஒதுக்கீடு.
காவல்துறையை நவீனப்படுத்து ரூ.430 கோடி.
எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்து ரூ.2284 கோடி.
வருமான வரி உச்ச வரம்பு ரூ.1,60,000 ஆக உயர்வு. மூத்த குடிமக்களுக்கு ரூ.2,40,000-ஆகவும், பெண்களுக்கு ரூ.1,80,000 ஆகவும் உயர்வு.
நிறுவன வரியில் மாற்றமில்லை.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.3172 கோடியாக அதிகரிப்பு.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மத்தியப் பல்கலைக்கழகம் ஏற்படுத்த முடிவு.
எல்சிடி மானிட்டர்கள் மீதான இறக்குமதி வரி பாதியாகக் குறைப்பு.
செட்-டாப் பாக்ஸ் மீது 5% இறக்குமதி வரி.
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு.

Saturday, 4 July, 2009

கிட்னியில் கல் - சிகிச்சை அனுபவம்

இன்று டியுப் எடுபதர்காக சென்றேன் , டாக்டர் செக் செய்துவிட்டு டியுப் எடுக்கலாம் என்று உறுதி . நர்ஸ் டிரெஸ்ஸை மாற்ற சொன்னார், நானும் பச்சை கலர் உடைக்கு மாறினேன். மனதில் சிறு பயம் இருந்தது , அதை வெளிக்காட்டவில்லை. ஆபரேஷன் தியேட்டரில் கால்களை தூக்கி சரியாக படுத்துக்கொண்டேன். டாக்டர் மயக்க மருந்து கொடுக்காமல் தன் வேலையை தொடங்கினார். முதலில் உறுப்பை சுற்றி மருந்து தடவினார், அடுத்து வேறு மருந்தை உறுப்பினுள் செலுத்தினர். அப்பொழுது கொஞ்சம் வலி இருந்தது பொறுத்துக்கொண்டேன். அடுத்து ஒரு இரும்பு குச்சிபோல் இருந்த ஒன்றை வைத்து உறுப்பில் உள்ள டியுபை எடுத்தார், வலி பொறுக்கவில்லை. டாக்டர் அந்த டியுபை என்னிடம் காண்பித்தார், அதை வெறுப்பாய் பார்த்தேன். நர்ச்ஸ் உதவியுடன் எழுந்து பாத்ரூமுக்கு சென்றேன், சுத்தமாக கிளீன் செய்தேன். இந்த அனுபவம் வெறுப்பாய் இருந்தது, ஆனால் தவிர்க்க முடியாதது. வழியை விட சிகிச்சை முறை வெறுப்பாய் இருந்தது. கடைசியில் டாக்டருக்கும் நர்ச்சுக்கும் நன்றியை சொல்லி பணத்தை கட்டி கிளம்பினேன்.

Friday, 3 July, 2009

ரயில்வே பட்ஜெட் தாக்கல்

2009-10 ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி மக்களவையில் தாக்கல் செய்தார்.
ரயில்வே பட்ஜெட் முக்கிய அம்சங்கள்
சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட 50 ரயில்நிலையங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்.
தில்லி, சென்னை, கொல்கத்தா ஆகிய பெருநகரங்களில் 'மகளிர் மட்டும்' ரயில்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இத்தகைய ரயில்கள் பணிபுரியும் பெண்களுக்கு வசதியாக அலுவலக நேரங்களில் மட்டும் இயங்கும். ஏற்கெனவே இதுபோன்ற ரயில் மும்பையில் இயங்கி வருகிறது.
ரயில் நிலையங்களில் பல்நோக்கு வணிக வளாகங்கள் கட்டப்படும்
நீண்டதூர ரயில்களில் பயணிகளுக்கு அவசரச் சிகிச்சை அளிப்பதற்காக டாக்டர்கள் நியமனம்.
கூடுதலாக 200 டிக்கெட் முன்பதிவு மையங்கள் திறக்கப்படும்.
கூடுதலாக 3000 சாதாரண டிக்கெட் பெறும் கவுன்டர்கள் திறக்கப்படும்.
5000 அஞ்சலகங்களில் ரயில் டிக்கெட் பெறும் வசதி.
பெருநகரங்களுக்கு இடையேயான ரயில்களில் இரண்டடுக்கு கோச்கள் அறிமுகம்
சென்னை உள்ளிட்ட 7 இடங்களில் நர்சிங் கல்லூரிகள் திறக்கப்படும்.
18 ஆயிரம் புதிய சரக்கு ரயில் பெட்டிகளை வாங்கத் திட்டம்.
மாத வருமானம் ரூ.1500க்கும் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு 100 கி.மீ.வரை பயணம் செய்ய ரூ.25 க்கு மாதாந்திர சீசன் டிக்கெட் வழங்கப்படும்.
பத்திரிகையாளர்களுக்கான கட்டணச் சலுகை 30 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படும்.
சென்னை-தில்லி, சென்னை-அலகாபாத், புவனேசுவர் - தில்லி, எர்ணாகுளம்-தில்லி உள்ளிட்ட 12 பாயிண்ட் டூ பாயிண்ட் (இடையில் நிற்காத) ரயில் சேவைகள் தொடங்கப்படும்.
தத்கல் முன்பதிவு செய்யும் நாள்கள் 5-லிருந்து 2-ஆகக் குறைப்பு. தத்கல் கட்டணமும் குறைப்பு.
பயணிகள் மற்றும் சரக்குக் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை.

நாடோடிகள் - விமர்சனம்

Movie - Nadodigal
Director - Samuthirakani
Music - Sundar C Babu
Cast - Sasikumar, Vijay, Bharani, Ananya, Neha, Abhinaya, Shanthini, Ganja Karuppu
Rate -
உன் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே! டைட்டில் கார்டு முதல் கடைசி சீன் வரை நட்புக்கு நம்பிக்கை கொடி பிடித்திருக்கிறார்கள். சுப்ரமணியபுரம் சசிகுமாரும் நெறஞ்ச மனசு சமுத்திரக்கனியும்!
இதெல்லாம் நமக்கு அசால்ட்டு மச்சி... என்கிற மாதிரியான அலட்சியமும் நம்பி வந்தவனுக்கு பிரச்னை என்றால் வரிந்து கட்டுகிற கிராமத்து கரிசனமும் சசிகுமாருக்கு அழகாய் கை கூடுகிறது.
முறைப்பெண்ணை திருமணம் செய்து தர நிபந்தனை போடுகிற மாமாவிடம் பதிலுக்கு உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு மாமா... என பிரேம்ஜி ஸ்டைலில் சசி அடிக்கும் டயலாக் அக்மார்க் மதுரை குசும்பு.
அத்தானின் வறட்டு தாடியை வலிக்காமல் பிய்த்து வாயில் போட்டுக்கொள்ளும் அனன்யாவின் காதல் பாவனைகள் ச்சோ ஸ்வீட். கம்ப்யூட்டர் சென்டர் நடத்துகிற கேரக்டருக்கு விஜய் சரியான பொருத்தமென்றாலும், காதலி அபிநயாவை சர்வ சாதாரணமாக மடிப்பது நம்பும்படி இல்லீங்கண்ணா. எப்போதும் நண்பர் கூட்டத்தில் கலகலப்புக்கு கேரன்ட்டி தருகிற வெள்ளந்தி பையனாக கல்லூரி பரணி கலக்கியிருக்கிறார்.
காதல் திருமணத்துக்கான ஆள் கடத்தல் வைபவத்தில் மொக்கை பிகருக்காகல்லாம் என்னால ரிஸ்க் எடுக்க முடியாதுடா... என அலம்பல் செய்து காமெடி, சரவெடி..! தடதட தறி ச்சத்தத்துடன் காட்டப்படுகிற பரணியின் குடும்ப பின்னணி உள்ளிட்ட விஷயங்கள் கதையை உண்மை சம்பவமாக உயர்த்துகிறது.
திடீர் பரபரப்பையோ, சஸ்பென்ஸையோ நம்பாமல் காதலுக்காக ஒரு கடத்தல், அவசர கல்யாணம் என மெதுவாக ஆரம்பித்து வேகம் கூட்டியிருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனம்.காதல் கல்யாணம் நடத்தி வைக்கிற நண்பர்களுக்கு ஏற்படும் இழப்புகளை காட்டியிருப்பதும் தமிழுக்கு புதுசுதான்.
விஜய்க்கு அப்பாவாக வரும் அந்த நடுத்தர வயது நபர், விளம்பர விரும்பியாக வந்து கிச்சுகிச்சு மூட்டும் நமோ நாராயணன் என சின்ன சின்ன கேரக்டர்கள் நம்மை வசீகரிக்கின்றன. இந்த மண் வாசனை கதைக்கு துளியும் பொருத்தமில்லாமல் பெண் அரசியல்வாதி கேரக்டர் ஓவராக கர்ஜிப்பது மட்டும் மகா டார்ச்சர்.ரத்தம் சிந்தி நடத்தி வைத்த காதல் கல்யாணம் அபத்தமாக அல்பாயுசில் முடிவது சற்றும் எதிர்பாராத சுவாரஸ்யம். ஆனால் அரிசி கடத்தல், ஈவ்டீசிங் ரேஞ்சுக்கு அதற்கு எதிராக பில்டப் வசனங்கள் தேவையா? தவிர்த்திருக்கலாம்.
நாடோடிகள் : நம் மனதில் நிரந்தர வீடு கட்டுகின்றனர்.