Saturday, 20 November 2010

Amritha's transportation projects in her school project day




Monday, 15 November 2010

கலாநிதி மாறன் - ஸ்பைஸ்ஜெட் தலைவரானார்

ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸின் தலைவரானார் தமிழகத்தின் பெரும் தொழிலதிபரான கலாநிதி மாறன்.
மீடியா உலகின் ஜாம்பவனாகத் திகழும் கலாநிதி மாறன், சமீபத்தில் இந்தியாவின் முன்னணி ஏர்லைன்ஸ் நிறுவனமான ஸ்பைஸ்ஜெட்டின் பெரும்பான்மைப் பங்குகளை வாங்கினார். இப்போது அவரிடம் 38.66 சதவீத பங்குகள் அவர் வசம் உள்ளன. இதைத் தொடர்ந்து ஸ்பைஸ் ஜெட்டின் இயக்குநர் குழுவில் புரமோட்டர் டைரக்டராக அவர் இணைந்தார். தொடர்ந்து மாறனின் சார்பில் எஸ் ஸ்ரீதரன், நிகோலஸ் மார்டின் பால், ஜெ ரவீந்திரன், எம் கே ஹரிநாராயணன் ஆகியோர் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு வழி விடும் பொருட்டு, ஏற்கெனவே இயக்குநர் குழுவில் இருந்த பிஎஸ் கன்சாக்ரா (இவரது குடும்பம்தான் ஸ்பைஸ்ஜெட்டை நிறுவியது), கிஷோர் குப்தா, முக்காராம் ஜான் மற்றும் விஜயகுமார் ஆகியோர் ராஜினாமா செய்தனர்.
இப்போது ஸ்பைஸஜெட்டின் தலைவராக மாறன் பொறுப்பேற்றுள்ளார். இதனை மும்பை பங்குச் சந்தைக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் முறைப்படி இன்று அறிவித்தது.
இயக்குநர் குழுவில், சார்பு இயக்குநராக கலாநிதி மாறனின் மனைவி காவேரி மாறனும் இணைந்துள்ளார். நிறுவனத்தின் சிஇஓவாக நீல் மில்ஸ் என்பவரை நியமித்துள்ளார் கலாநிதி மாறன்.
இந்திய வரலாற்றில் தமிழக தொழிலதிபர் ஒருவர் நாட்டின் முன்னணி ஏர்லைன்ஸின் உரிமையாளர் மற்றும் தலைவராக இருப்பது இதுவே முதல்முறை. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தற்போது இந்தியாவின் அனைத்துப் பகுதிகள் மற்றும் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்களை இயக்குகிறது.

Wednesday, 10 November 2010

தமிழகத்திற்கு வரும் மகிந்திராவின் கார் தொழிற்சாலை

நாட்டின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மகிந்திரா அன்ட் மகிந்திராவின் கார் தயாரிப்புத் தொழிற்சாலை தமிழகத்தில் அமையவுள்ளது.
இத்தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மகிந்திரா நிறுவனத்தின் கார் தயாரிப்பு தொழிற்சாலை தமிழகத்தில் அமைந்தால், தமிழகத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் அனைத்து நிறுவனங்களின் கார்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 10.4 லட்சமாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
மகிந்திரா நிறுவனத்தின் கார் தயாரிப்பு தொழிற்சாலை தமிழகத்திற்கு வரவுள்ளது என்ற செய்தி மட்டுமே தற்போது வெளியாகியுள்ளது. இருப்பினும் எங்கு வருகிறது என்பது உள்ளிட்ட பிற விரிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை. மேலும் எவ்வளவு முதலட்டை மகிந்திரா மேற்கொள்ளவுள்ளது என்பதும் தெரியவில்லை.
இருப்பினும் 400 ஏக்கர் நிலப்பரப்பை தற்போது மகிந்திரா நிறுவனம் கையகப்படுத்தியுள்ளதாம். கூடுதல் நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பான பணிகளிலும் அது ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் ரூ. 4000 கோடி அளவுக்கு முதலீடு செய்யும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு முதல் 7 ஆண்டுகளுக்கு பல்வேறு சலுகைகள் தரப்படும் என சமீபத்தில் அறிவித்தது தமிழக அரசு. இதையடுத்தே தற்போது மகிந்திரா அன்ட் மகிந்திரா தமிழகத்திற்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.