ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸின் தலைவரானார் தமிழகத்தின் பெரும் தொழிலதிபரான கலாநிதி மாறன்.
மீடியா உலகின் ஜாம்பவனாகத் திகழும் கலாநிதி மாறன், சமீபத்தில் இந்தியாவின் முன்னணி ஏர்லைன்ஸ் நிறுவனமான ஸ்பைஸ்ஜெட்டின் பெரும்பான்மைப் பங்குகளை வாங்கினார். இப்போது அவரிடம் 38.66 சதவீத பங்குகள் அவர் வசம் உள்ளன. இதைத் தொடர்ந்து ஸ்பைஸ் ஜெட்டின் இயக்குநர் குழுவில் புரமோட்டர் டைரக்டராக அவர் இணைந்தார். தொடர்ந்து மாறனின் சார்பில் எஸ் ஸ்ரீதரன், நிகோலஸ் மார்டின் பால், ஜெ ரவீந்திரன், எம் கே ஹரிநாராயணன் ஆகியோர் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு வழி விடும் பொருட்டு, ஏற்கெனவே இயக்குநர் குழுவில் இருந்த பிஎஸ் கன்சாக்ரா (இவரது குடும்பம்தான் ஸ்பைஸ்ஜெட்டை நிறுவியது), கிஷோர் குப்தா, முக்காராம் ஜான் மற்றும் விஜயகுமார் ஆகியோர் ராஜினாமா செய்தனர்.
இப்போது ஸ்பைஸஜெட்டின் தலைவராக மாறன் பொறுப்பேற்றுள்ளார். இதனை மும்பை பங்குச் சந்தைக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் முறைப்படி இன்று அறிவித்தது.
இயக்குநர் குழுவில், சார்பு இயக்குநராக கலாநிதி மாறனின் மனைவி காவேரி மாறனும் இணைந்துள்ளார். நிறுவனத்தின் சிஇஓவாக நீல் மில்ஸ் என்பவரை நியமித்துள்ளார் கலாநிதி மாறன்.
இந்திய வரலாற்றில் தமிழக தொழிலதிபர் ஒருவர் நாட்டின் முன்னணி ஏர்லைன்ஸின் உரிமையாளர் மற்றும் தலைவராக இருப்பது இதுவே முதல்முறை. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தற்போது இந்தியாவின் அனைத்துப் பகுதிகள் மற்றும் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்களை இயக்குகிறது.
Monday, 15 November 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment