தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து வேலூர் சிறையில் இருந்து நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் இன்று விடுதலையானார்.
சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய சீமானை, இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் கூறி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்தது.
இதனை எதிர்த்து சீமான் சகோதரர் ஜேம்ஸ் பீட்டர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் தர்மராவ், ஹரிபரந்தாமன் ஆகியோர், சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்த உத்தரவை ரத்து செய்தனர். இதனையடுத்து வேலூர் சிறையில் இருந்து சீமான் இன்று விடுதலை செய்யப்பட்டார். அவரை வரவேற்க பெரும் திரளான தொண்டர்களும், நடிகர்களும், இயக்குனர்களும், தலைவர்களும் வேலூர் சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர்.
Friday, 10 December 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment