
இந்தியன் பிரிமியர் லீக்கின் (ஐ.பி.எல்.) 3ஆவது தொடரில் கங்குலி கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி ரசிகர்களிடேயே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத ஒரு போட்டித் தொடராகும். இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் உரிமையாளர் ஆவார்.
ஐ.பி.எல். முதல் தொடரில் கங்குலி கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்தத் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி சரியாக சோபிக்கவில்லை. இதையடுத்து 2ஆவது ஐ.பி.எல். தொடருக்கு கங்குலிக்குப் பதிலாக மெக்குல்லம் கேப்டனா நியமிக்கப்பட்டார்.
ஆனால் 2ஆவது ஐபிஎல் தொடரிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி படுதோல்வியைச் சந்தித்து.
இந்த நிலையில் ஐ.பி.எல். 3ஆவது தொடரில் கங்குலி மீண்டும் கேப்டனாக செயல்படுவார் என இன்று அறிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment