திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் டிசம்பர் 31ஆம் தேதி இரவு சந்திர கிரகணம் நிகழ்வதால், ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பின்போது கோயில் நடை சாத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31ஆம் தேதி இரவு 12 மணிக்கு மேல் ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பையொட்டி ஒவ்வொரு கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.
அதிலும் உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். அன்று இரவு முதலே கோவிலுக்கு வந்து நள்ளிரவு 12 மணிக்கு பிறகு ஏழுமலையானை தரிசனம் செய்தால் ஆண்டு முழுவதும் நன்றாக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
ஆனால் வருகிற ஆங்கிலப் புத்தாண்டு அன்று இரவு சந்திர கிரகணம் நிகழ்வதால் திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்படும் என்று கோவில் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கோவிலின் தேவஸ்தான அதிகாரி கூறுகையில், `ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் சந்திரக கிரகணம் வருகிறது. இதனால் இந்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி மாலை 7 மணிக்கு கோவில் மூடப்படும். மறுநாள், ஜனவரி 1-ந் தேதி காலை 7 மணிக்குத்தான் கோவில் திறக்கப்படும். கிரகணம் முடிந்த பிறகு ஆலயத்தை தூய்மைப்படுத்தி பரிகார பூஜைகள் முடிந்த பிறகு வழக்கம் போல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்' என தெரிவித்தார்.
எனவே இந்த ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை திருப்பதியில் கொண்டாட வேண்டும் என்று நினைத்தவர்கள் பெரும் ஏமாற்றத்திற்குள்ளாகியிருக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment