
இந்நிறுவனத்தின் இரண்டாவது ஆலை மானேசரில் உள்ளது. இந்த ஆலையில் முதலீடு செய்வதன் மூலம் ஆண்டு உற்பத்தி2.5 லட்சம் காராக உயரும். இந்த இலக்கு 2012-ம் ஆண்டில் எட்டப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து இப்புதிய முதலீட்டு அறிவிப்பை நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி அஜய் சேத் தெரிவித்தார்.
டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் இந்நிறுவனத்தின் லாபம் ரூ. 687 கோடியாகும்.
நிறுவனத்தின் விற்பனை வருமானம் ரூ. 7,333.77 கோடியாகும். இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் எட்டப்பட்டதைக் காட்டிலும் 62 சதவீதம் கூடுதலாகும். முந்தைய ஆண்டு நிறுவனத்தின் வருமானம் ரூ. 4,512.64 கோடியாகும்.
வாகன விற்பனை 37 சதவீதம் அதிகரித்து 2,18,910 ஆக உயர்ந்துள்ளது.
சர்வதேச பொருளாதார தேக்க நிலை நிலவியபோதிலும் மாருதி கார் விற்பனை பாதிக்கப்படவில்லை. இருப்பினும் தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவாக லாபம் உயர்ந்துள்ளது. அதேபோல விற்பனையும் அதிகரித்துள்ளது. உள்நாட்டில் கார் விற்பனை அதிகரித்ததற்கு அரசு அளித்த வரிச் சலுகை முக்கியக் காரணம் என்று அஜய் சேத் கூறினார்.
மூன்றாம் காலாண்டில் நிறுவன ஏற்றுமதி 167 சதவீதம் அதிகரித்து 39,116 ஆக உயர்ந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ஏற்றுமதி செய்த கார்களின் எண்ணிக்கை 14,634 ஆகும்.
மாருதி நிறுவனத்தின் குர்காவ்ன் ஆலையில் ஆண்டுக்கு 7 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. மானேசர் ஆலை 3 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு இந்நிறுவன கார் உற்பத்தி ஆண்டுக்கு 15 லட்சமாக உயரும் என்று அவர் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment