
இதேபோல் மராத்திய மொழிப் படமான ‘ஜோக்வா’வில் நடித்த உபேந்திரா லிமேய்-க்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
PTI PhotoFILEதேசிய அளவில் சிறந்த இயக்குனருக்கான விருதை ‘நான் கடவுள்’ படத்தை இயக்கிய பாலா வென்றுள்ளார். இதே படத்தில் ஒப்பனைக் கலைஞராகப் பணியாற்றிய மூர்த்திக்கு சிறந்த ஒப்பனைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சேது, நந்தா, பிதாமகன் வரிசையில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘நான் கடவுள்’ படத்திற்கு 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேசிய அளவில் சிறந்த ஜனரஞ்சகப் படமாக ‘ஓய் லக்கி! லக்கி ஓய்’ திரைப்படமும், சிறந்த படமாக ராகுல் போஸ் நடித்த வங்க மொழித் திரைப்படமான ‘அந்தாஹீன்’ படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை அனிருத்தா ராய் சௌத்ரி இயக்கினார்.
மதூர் பண்டார்க்கரின் ‘ஃபேஷன்’ படத்தில் நடித்த கங்கனா ரனவத்திற்கு சிறந்த துணை நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ‘ராக் ஆன்’ படத்தில் நடித்த அர்ஜுன் ராம்பால் சிறந்த துணை நடிகருக்கான விருதைத் தட்டிச் சென்றார்.
கன்னட மொழிப் படமான ‘குப்பசிகலு’ (Gubbachigalu) சிறந்த குழந்தைகள் படத்திற்கான விருதை வென்றுள்ளது. பாலிவுட் படமான ‘ஹிந்தி மா’வில் நடித்த ஷாம்ஸ் படெலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment