Source : IOCL
Saturday, 15 January 2011
Thursday, 13 January 2011
தமிழக மீனவர் கொல்லப்பட்டதற்கு இந்தியா கண்டனம்
புதுடெல்லி: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து துப்பாக்கி சூடு குறித்த விவரங்களை இந்திய வெளியுறவுச் செயலர் எஸ்.எம்.கிருஷ்ணா கோரியுள்ளார். கதாப்பட்டிணம் மீனவர் பாண்டியன் நேற்று இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டு உயிரிழந்தார்.
இலங்கை கடற்படையின் கொடூரச் செயலை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட புதுக்கோட்டை மற்றும் நாகை மாவட்ட மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதனையடுத்து தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்று இலங்கை மறுப்பு தெரிவித்துள்ளது.

இலங்கைக் கடற்படையினர் சுட்டதில் தமிழக மீனவர் சாவு
புதுக்கோட்டை மாவட்டம், ஜகதாப்பட்டினத்திலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் புதன்கிழமை துப்பாக்கியால் சுட்டதில் மீனவர் ஒருவர் கொல்லப்பட்டார். நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள சின்னக்குடியைச் சேர்ந்த ராஜேந்திரனின் மகன் பாண்டியன் (19). இவரும், புதுக்கோட்டை மாவட்டம், ஜகதாப்பட்டினத்தைச் சேர்ந்த முனியசாமியின் மகன்கள் மணிகண்டன், மணிவண்ணன் ஆகியோரும் மீன் பிடிப்பதற்காக புதன்கிழமை காலை ஜகதாப்பட்டினத்திலிருந்து கடலுக்குள் விசைப் படகில் சென்றனர்.
இந்திய கடல் எல்லைக்குள் 14 "நாட்டிக்கல்' மைல் தொலைவில் விசைப் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அந்தப் பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். இதில் பலத்த குண்டுக் காயமடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனால், ஜகதாப்பட்டினம் கடற்கரையில் பரபரப்பு நிலவுகிறது.
Wednesday, 12 January 2011
பொங்கலுக்கு 5 கேரள மாவட்டங்களில் அரசு விடுமுறை
பொங்கலுக்கு கேரளத்தின் 5 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடுவதாக கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக, பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அறிவிக்குமாறு கேரளத்தை தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்று, கேரள அரசு பொங்கல் பண்டிகைக்கு தமிழர்கள் அதிகம் உள்ள 5 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளித்து அறிவித்துள்ளது. இதன்படி, வரும் ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் விடுமுறை என கேரள அரசு அறிவித்துள்ளது.

Tuesday, 11 January 2011
Nokia Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி?
உங்களுடைய கை தொலைபேசியிலும் இலும் தமிழ் website ஐ பார்க்க முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான், உங்களுடைய phone இல் www.opera.com இங்கு செல்லவும்.
opera for phones download opera mini 5.1 (271 KB) download செய்த பிறகு Address Bar இல் www. ஐ அழித்து விட்டு opera:config என டைப் செய்யுங்கள் ஆக கடைசியில் use bitmap fonts for complex scripts என்பது No என்று இருக்கும் அதை yes என மாற்றி விட்டு save செய்து கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் Opera வை exit செய்து விட்டு மீண்டும் open செய்யுங்கள். தமிழ் தளம் இனி உங்களுடைய phone இல் சரியாக வேலை செய்கின்றதா என தெரிந்து கொள்ள மேலே உள்ள Google search இல் nimzath என தேடி பார்க்கவும்.

Monday, 10 January 2011
அதிமுகவுக்கு வாக்களிக்கும்படி கேட்பேன்: சீமான்
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்கும்படி மக்களிடம் கேட்பேன் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்தார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை, அவரது கட்சித் தலைமை அலுவலகத்தில் "நாம் தமிழர்' கட்சித் தலைவர் சீமான் திங்கள்கிழமை சந்தித்தார். சுமார் 40 நிமிஷ சந்திப்புக்குப் பிறகு வைகோ நிருபர்களிடம் கூறியது: "தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை உள்ளது. தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது, இலங்கை ராணுவத்தால் கொல்லப்படுவது குறித்து சீமான் பேசியதற்காக அவரைத் தமிழக அரசு கைது செய்தது. அதைத்தொடர்ந்து தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது.
சீமான் மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டப்படியான வழகு தவறு என்று கூறி நீதிமன்றம் அவரை விடுவித்தது. சீமான் எந்தத் தவறும் செய்யவில்லை. விடுதலைப் புலிகளை ஆதரிப்பதை யாராலும் தடுக்க முடியாது. வரப்போகும் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணியைத் தோற்கடிப்பதே எங்களின் நோக்கம்' என்றார்.
இதைத்தொடர்ந்து சீமான் கூறியது: "தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த என்னை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துப் பேசினார். அதற்கு நன்றி சொல்வதற்காக அவரைச் சந்தித்தேன்.
வரப்போகும் தேர்தலில் திமுக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய குறிக்கோள். வைகோ பல ஆண்டுகளாக தேசிய அரசியலில் இருந்துவிட்டார். அவர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்ற என் ஆசையை அவரிடம் கூறினேன். யோசிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ், திமுக கூட்டணியை வீழ்த்துவதற்கு பெரிய கட்சி அதிமுக தான். எனவே இந்த முறையும் அதிமுகவிற்கு வாக்களிக்கும்படி மக்களிடம் கேட்பேன்' என்றார்.

சென்னை ஓபன் டென்னிஸ் 2011: பயஸ்-பூபதி சாம்பியன்
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பயஸ்-பூபதி ஜோடி 5-வது முறையாக பட்டம் வென்றது.
இவர்கள் 6-2, 6-7, 10-7 என்ற கணக்கில் நெதர்லாந்தின் ராபின் ஹேஸி-அமெரிக்காவின் டேவிட் மார்டின் ஜோடியை வென்றது.
உள்ளூர் ரசிகர்களின் ஆதரவோடு களம் கண்ட இந்திய ஜோடி, 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை வென்றது. இந்த செட்டில் பயஸ்-பூபதி நேர்த்தியான ஷாட்களை அடித்ததோடு, முன்கள ஆட்டத்தைக் கையாண்டு நெட்டுக்கு அருகிலேயே பந்தை தட்டிவிட்டு புள்ளிகளைப் பெற்றது.
இரண்டாவது செட்டின் மூன்றாவது கேமில் பயஸின் சர்வீûஸ முறியடித்தது மார்ட்டின் ஜோடி. அதற்குப் பதிலடி தரும் வகையில் அடுத்த கேமில் மார்டின் ஜோடியின் சர்வீûஸ முறியடித்தது இந்திய ஜோடி. இருப்பினும் இந்த செட்டை இந்திய ஜோடி 6-7 என்ற கணக்கில் இழந்தது.
இதையடுத்து டை பிரேக்கர் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் முதல் 5 கேம்களின் முடிவில் மார்ட்டின் ஜோடி 4-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அடுத்து நடைபெற்ற கேம், இந்திய ஜோடிக்கு திருப்புமுனையாக அமைந்தது. 6-வது கேமில் இருந்து அடுத்த 3 கேம்களையும் வென்று 4-4 என்ற கணக்கில் சமநிலைப் பெற்றது இந்திய ஜோடி.
9-வது கேமில் மார்ட்டின் ஜோடி தொடர்ந்து இரு முறை நெட்டில் அடிக்கவே பயஸ்- பூபதி ஜோடி 5-4 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதன்பின்னர் நடைபெற்ற கேம்களில் மகேஸýம், பூபதியும் ஆக்ரோஷமாக ஆடினர். இறுதியில் இந்திய ஜோடி 10-7 என்ற கணக்கில் அந்த செட்டை வென்றது. வெற்றி உற்சாகத்தல் பயஸ் பாய்ந்து சென்று மகேஸ் பூபதியைக் கட்டிப்பிடித்து அவரது இடுப்பில் ஏறி அமர்ந்தார்.
இந்த வெற்றி மூலம் சென்னை ஓபனில் இரட்டையர் பிரிவில் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பெருமையைப் பெற்றது இந்த ஜோடி. 1997, 1998, 1999, 2002 ஆகிய ஆண்டுகளில் இந்த ஜோடி சென்னை ஓபனில் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tuesday, 4 January 2011
கற்பழித்த எம்.எல்.ஏவை குத்திக் கொன்ற பெண்
பீகாரைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ராஜ் கிஷோர் கேசரி இன்று ஒரு பள்ளி ஆசிரியையால் குத்தி கொல்லப்பட்டார். அந்த பெண் ஏற்கனவே கேசரி தன்னை கற்பழித்தாக புகார் அளித்திருந்தார்.
பூர்னியாவில் ஒரு பள்ளிக்கூடத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு அவர் கேசரி மீது போலீஸில் புகார் கொடுத்தார். அதில், தன்னை கேசரியும், அவரது அடியாட்களும் கடந்த மூன்று வருடமாக கட்டாயப்படுத்தி கற்பழித்து வந்ததாக கூறியிருந்தார். இருப்பினும் இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து இன்று காலை சிபாஹி தோலாவில் உள்ள எம்எல்ஏவின் வீட்டுக்குச் சென்றார் பூனம். அங்கு தொண்டர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் கேசரி. அவரிடம் சென்ற பூனம், கேசரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது திடீரென கத்தியை எடுத்து சரமாரியாக கேசரியைக் குத்தினார். இதில் நிலை குலைந்த கேசரி கீழே விழுந்தார். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை போலீஸார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.ஆனால் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பீகாரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கொல்லப்பட்ட கேசரிக்கு 51 வயதாகிறது. நான்கு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.
கேசரியை சரமாரியாக குத்திக் கொன்ற பூனை அங்கிருந்தவர்ள் மடக்கிப் பிடித்து சரமாரியாக அடித்ததில் அவர் படுகாயமடைந்தார். பின்னர் அவரை போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to:
Posts (Atom)