சமாவோ தீவுக்கு அருகே இருக்கும் டோங்கா தீவு பகுதியில் இன்று மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானது. நேற்று முன்தினம் ஏற்பட்ட சுனாமிக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 189 ஆக உயர்ந்துள்ளது.
நியூசிலாந்துக்கு கிழக்கே பசிபிக் பெருங்கடல் பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தால் சுனாமி ஏற்பட்டது. இதில் சமாவோ தீவு கடும் பாதிப்புக்கு ஆளானது.
சமாவோ தீவில் இதுவரை 149 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அமெரிக்கன் சமாவோவில் 31, டோங்காவில் 9 பேர் இறந்துள்ளனர். மொத்தமாக சுனாமிக்கு 189 பேர் பலி யாகியுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் 100க்கும் மேற்பட்ட மக்களை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் சமாவோ தீவு மக்களில் பெரும்பான்மையினர் அங்கிருக்கும் மலை பகுதியிலே வசித்து வருகின்றனர். மீண்டும் சுனாமி வந்துவிடுமோ என்ற அச்சத்தில் கடற்கரை பகுதிகளிலிருந்த இருக்கும் தங்களது வீடுகளுக்கு திரும்ப மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் இன்று காலை தெற்கு டோங்கா பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவானது.
Friday, 2 October 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment