
இதுகுறித்து அமைப்பின் நிர்வாகி தங்கராஜ் மற்றும் நடிகர் எஸ்.வி.சேகர் கூறியதாவது:
சென்னையில் இந்திய திரைப்பட திறனாய்வு அமைப்பு சார்பில் 7வது திரைப்பட விழாவை வரும் 16ம் தேதி மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் தொடங்கி வைக்கிறார். 24ம் தேதி வரை விழா நடைபெறுகிறது.
துவக்க நாளன்று ஸ்பெயின் நாட்டு சினிமா திரையிடப்பட உள்ளது. விழாவில் மொத்தம் 40 நாடுகளைச் சேர்ந்த 120 படங்கள் திரையிடப்பட உள்ளன.
பெல்ஜியம், பின்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் படங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். கேன்ஸ் பட விழாவில் திரையிடப் பட்ட சில படங்களும் திரையிடப்படும். ஜெர்மனி இயக்குநர் ரோலான் ரிபர் பற்றி ஆய்வு நடைபெற உள்ளது.
விழாவில் வெளிநாட்டு இயக்குனர்களும் பங்கேற்க உள்ளனர். முதன் முறையாக தமிழ் படங்களுக்கான போட்டி பிரிவும் அமல் செய்யப்பட உள்ளது. 'பசங்க', 'அச்சமுண்டு அச்சமுண்டு', 'பொக்கிஷம்', 'நாடோடிகள்' உள்ளிட்ட படங்கள் பங்கேற்கின்றன.
திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு விழாவில் சலுகை அளிக்கப்படும் என்றனர்.
No comments:
Post a Comment