Monday, 29 June 2009

ஜாகுவார்-லேண்ட்ரோவர் கார் அறிமுகம்

ஜூன் 28: உலக அளவில் பிரபலமாகியுள்ள ஜாகுவார், லேண்ட்ரோவர் ஆகிய மோட்டார் கார் நிறுவனங்களை டாடா குழுமம் விலைக்கு வாங்கியதற்குப் பிறகு அவ்விரு நிறுவனங்கள் தயாரிக்கும் விலை உயர்ந்த கார்கள் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தியச் சந்தைக்கு இவ்விரு நிறுவனங்களின் வாகனங்கள் நேரடியாக விற்பனைக்கு வருவது இதுவே முதல் முறை. இந்த நிகழ்ச்சியில் டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ரவி காந்த், ஜாகுவார் நிறுவன நிர்வாக இயக்குநர் மைக் ஓ டிரிஸ்கால், லேண்ட் ரோவர் நிர்வாக இயக்குநர் பில் பாபம், ஜாகுவார்-லேண்ட் ரோவர் கூட்டு நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ஸ்மித் ஆகியோர் பங்கேற்றனர். நிருபர்களின் கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளித்தனர். ரூ.92 லட்சம் விலை: ஜாகுவார் கார்கள் ரூ.63 லட்சம், ரூ.92 லட்சம் என்று இரு மாடல்களில் விற்கப்படும். அவை எக்ஸ்-எஃப், எக்ஸ்-கே-ஆர் ரகங்களாகும். லேண்ட் ரோவர் கார்கள் ரூ.63 லட்சம், ரூ.89 லட்சம் ஆகிய விலைகளில் கிடைக்கும். இவை டிஸ்கவர், ரேஞ்ச் ரோவர் என்ற இரு மாடல்களாகும். ஜாகுவார் என்ற மோட்டார் கார் நிறுவனம், மோட்டார் சைக்கிள்களில் மூன்றாவது நபரை அமரவைத்து உடன் அழைத்துச் செல்லும் பக்கவாட்டு கார் பகுதியைத் தயாரிப்பதில் புகழ் வாய்ந்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாகுவார்-லேண்ட்ரோவர் கார் தயாரிப்பில் ஈடுபட்டதால் டாடா குழுமத்துக்கு 2008-2009-ம் நிதியாண்டில் மட்டும் ரூ.2,505.25 கோடி இழப்பு ஏற்பட்டது. சர்வதேசச் சந்தையில் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டதால் இந்த இழப்பு ஏற்பட்டது. அப்படியும் டாடா குழுமம் மனம் தளராமல் தான் புதிதாக வாங்கிய இரு மோட்டார் கார் நிறுவனங்களின் உற்பத்தியை முடக்காமல் தொடர்ந்து மேற்கொண்டு வருவதும், அதன் தயாரிப்புகளை விற்க முற்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும். மும்பையில் இவ்விரு நிறுவனங்களின் மோட்டார் கார் வாகனங்களுக்கு உள்ள தேவையைப் பொருத்து இந்தியாவின் பிற நகரங்களுக்கும் இவற்றின் விற்பனையை விரிவுபடுத்துவோம் என்றார் மைக் ஓ டிரிஸ்கால்.
இந்தக் கார்கள் மிகவும் விலை அதிகமானவை. மிகப்பெரிய பணக்காரர்களால்தான் வாங்க முடியும் என்பதால் இவற்றை விற்க இலக்கு எதையும் நாங்கள் நிர்ணயிக்கவில்லை, இந்தியச் சாலைகளில் இந்தக் கார்களை அறிமுகப்படுத்துவதுதான் எங்களுடைய நோக்கம் என்றார் பில் பாபம்.
இந்தக் கார்களின் தொழில்நுட்பமும் திறனும் இந்திய வாகன ஓட்டிகளுக்குப் புதிய அனுபவமாக இருக்கும். நவீனத் தொழில்நுட்பங்களிலான கார் என்றால் எப்படி இருக்கும் என்று ஏராளமான இந்தியர்கள் அறிந்துகொள்ள இது வாய்ப்பாக இருக்கும் என்றார் ரத்தன் டாடா.
இந்தியாவில் எங்களுடைய நிறுவனத் தயாரிப்புகளை விற்பதற்கு ஒரு தளம் வேண்டும் என்று முன்னர் தேடிப் பார்த்தோம், இப்போது அந்த வாய்ப்பு நன்றாகக் கிடைத்திருக்கிறது என்றார் டேவிட் ஸ்மித். ஜாகுவார்-லேண்ட் ரோவர் கார்கள் பிரேசில், சீனா, ரஷியா ஆகிய நாடுகளில் நன்றாக விற்க ஆரம்பித்துள்ளது, எனவே இந்தியாவிலும் விற்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றார் டேவிட் ஸ்மித். (Dinamani)

Sunday, 28 June 2009

தேசிய அடையாள அட்டை திட்டம்: தலைவர் நந்தன் நிலகேணி

புது தில்லி, ஜூன் 25: தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் துறையின் தலைவராக இன்ஃபோசிஸ் டெக்னாலஜீஸ் நிறுவனத் தலைவர் நந்தன் நிலகேணி நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு மத்திய அமைச்சர் அந்தஸ்து அளிக்கப்படும் என மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறினார்.
நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கென தனி ஆணையம் ஒன்று உருவாக்கப்படுகிறது. திட்டக் குழு தலைமையில் இந்த ஆணையம் செயல்படும்.
அரசு செயல்படுத்தும் பிரபலமான திட்டங்களின் பலன் மக்களைச் சென்றடைகிறதா என்பதை இந்த ஆணையம் ஆராயும். இந்த ஆணையம் நலத் திட்டங்கள் செயல்படுவதை கண்காணிப்பதோடு தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தையும் படிப்படியாகச் செயல்படுத்தும்.
அரசு செயல்படுத்தும் முக்கியத் திட்டங்களான கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், சர்வ சிக்ஷா அபியான் (எஸ்எஸ்ஏ -அனைவருக்கும் கல்வித் திட்டம்), தேசிய கிராமப்புற சுகாதார திட்டம், பாரத் நிர்மான் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்போது அதன் பலன் உரியவர்களைச் சேர்கிறதா என்பதையும் இக்குழு ஆய்வு செய்யும்.

Saturday, 27 June 2009

சென்னையில் ஊரப்பாக்கம் ஊராட்சித் தலைவர் படுகொலை

சென்னை, ஜூன் 27: சென்னை தாம்பரம் அருகே ஊரப்பாக்கம் ஊராட்சித் தலைவர் ஜி.என்.ஆர். குமார் (47) குண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார்.
காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊரப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜி.என்.ஆர். குமார். காஞ்சிபுரம் மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளரான இவர் ரியல் எஸ்டேட் தொழிலையும் செய்து வந்தாராம்.

இன்று காலை 7.45 மணி அளவில் ஜி.எஸ்.டி. சாலை அருகே காரனை கூட்ரோடு சந்திப்பில் தனது காரில் இருந்தபடி நண்பர் ஒருவருடன் குமார் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது இவரது காரை பின் தொடர்ந்து வந்த காரில் இருந்து இறங்கிய 7 பேர், குமார் இருந்த காரின் மீது 4 நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். மேலும், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே குமார் உயிரிழந்தார்.

Tuesday, 23 June 2009

இப்போதைக்கு கட்சி தொடங்க மாட்டேன்: நடிகர் விஜய்

சென்னை, ஜூன் 22: இப்போதைக்கு கட்சி தொடங்க மாட்டேன்; ஆனால் மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடுவேன் என நடிகர் விஜய் தெரிவித்தார்.
நடிகர் விஜய் தனது 35-வது பிறந்த நாளை சென்னையில் திங்கள்கிழமை கொண்டாடினார். பிறந்த நாளையொட்டி சென்னை சாலிகிராமம், ரெங்கராஜபுரம் ஆகிய பகுதிகளில் இரண்டு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களைத் தொடங்கி வைத்தார். வடபழனியில் உள்ள அவருடைய திருமண மண்டபத்தில் இலவச மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 100 ரசிகர்கள் ரத்த தானம் செய்தனர். லிட்டில் ஃப்ளவர் பள்ளியிலும் மெர்சி ஹோம் இல்லத்திலும் மதிய உணவு வழங்கினார். இயக்குநரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகரன் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் விஜய் பேசியதாவது:
என் பிறந்த நாளை எப்போதும் நான் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பேன். அன்றைய தினம் என்னுடைய ரசிகர்கள் மக்கள் நலப் பணிகளில் முழுமையாக ஈடுபடுவார்கள் என்பதுதான் காரணம். இந்த ஆண்டு, நான் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் உதவிகளைச் செய்துள்ளனர். சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும். என்னுடைய ரசிகர் மன்றங்களை இப்போது மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளேன்.
தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று ரசிகர்கள், பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிந்தேன். ரசிகர் மன்றங்களை ஒன்றிணைத்து அரசியல் இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற கருத்தை அனைவரும் முன்வைத்தனர்.
அந்தக் கருத்தை நான் ஒதுக்கவில்லை. மனதில் நிறுத்தி வைத்திருக்கிறேன். என்னுடைய ரசிகர்கள் எப்போதோ தொண்டர்களாக மாறிவிட்டார்கள். ஆனாலும் இப்போதைக்கு அரசியல் கட்சி தொடங்க மாட்டேன். மக்கள் பிரச்னைக்காக ரசிகர்களுடன் இணைந்து போராடுவேன்.
தற்போது நான் நடித்து வரும் "வேட்டைக்காரன்' படம், 70 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. படம் தீபாவளிக்கு வெளிவருகிறது. என்னுடைய 50-வது படத்தை சங்கிலி முருகன் தயாரிக்கிறார் என்றார். நடிகர்கள் சத்யராஜ், சிபிராஜ், இயக்குநர்கள் ராஜா, செல்வபாரதி, ரமணா, கோபி, தயாரிப்பாளர்கள் ஆர்.பி.செüத்ரி, மோகன் நடராஜன், சங்கிலி முருகன் ஆகியோரும் ஏராளமான ரசிகர்களும் விஜய்யை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். (Dinamani).

Monday, 22 June 2009

Saina Nehwal wins Indonesian Open 2009

Indian world number eight Saina Nehwal won her first Super Series event in Indonesia on Sunday to raise her country's hopes of a strong performance at the world championships they host in August.

The world junior champion beat China's Lin Wang 12-21 21-18 21-9, having lost to the world number three at the Singapore Super Series the previous week.

"Saina's achievement is huge not just for Indian badminton but for Indian sport," former all-England winner and national coach Pullela Gopichand told Reuters.

"In terms of quality, the Indonesian event is as good as the all-England, the Olympics or the world championships with eight of the world's top 10 figuring in it."

Nehwal, 19, became the first Indian woman to reach the Olympic singles quarter-finals in Beijing last year.