Friday 3 July, 2009

நாடோடிகள் - விமர்சனம்

Movie - Nadodigal
Director - Samuthirakani
Music - Sundar C Babu
Cast - Sasikumar, Vijay, Bharani, Ananya, Neha, Abhinaya, Shanthini, Ganja Karuppu
Rate -
உன் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே! டைட்டில் கார்டு முதல் கடைசி சீன் வரை நட்புக்கு நம்பிக்கை கொடி பிடித்திருக்கிறார்கள். சுப்ரமணியபுரம் சசிகுமாரும் நெறஞ்ச மனசு சமுத்திரக்கனியும்!
இதெல்லாம் நமக்கு அசால்ட்டு மச்சி... என்கிற மாதிரியான அலட்சியமும் நம்பி வந்தவனுக்கு பிரச்னை என்றால் வரிந்து கட்டுகிற கிராமத்து கரிசனமும் சசிகுமாருக்கு அழகாய் கை கூடுகிறது.
முறைப்பெண்ணை திருமணம் செய்து தர நிபந்தனை போடுகிற மாமாவிடம் பதிலுக்கு உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு மாமா... என பிரேம்ஜி ஸ்டைலில் சசி அடிக்கும் டயலாக் அக்மார்க் மதுரை குசும்பு.
அத்தானின் வறட்டு தாடியை வலிக்காமல் பிய்த்து வாயில் போட்டுக்கொள்ளும் அனன்யாவின் காதல் பாவனைகள் ச்சோ ஸ்வீட். கம்ப்யூட்டர் சென்டர் நடத்துகிற கேரக்டருக்கு விஜய் சரியான பொருத்தமென்றாலும், காதலி அபிநயாவை சர்வ சாதாரணமாக மடிப்பது நம்பும்படி இல்லீங்கண்ணா. எப்போதும் நண்பர் கூட்டத்தில் கலகலப்புக்கு கேரன்ட்டி தருகிற வெள்ளந்தி பையனாக கல்லூரி பரணி கலக்கியிருக்கிறார்.
காதல் திருமணத்துக்கான ஆள் கடத்தல் வைபவத்தில் மொக்கை பிகருக்காகல்லாம் என்னால ரிஸ்க் எடுக்க முடியாதுடா... என அலம்பல் செய்து காமெடி, சரவெடி..! தடதட தறி ச்சத்தத்துடன் காட்டப்படுகிற பரணியின் குடும்ப பின்னணி உள்ளிட்ட விஷயங்கள் கதையை உண்மை சம்பவமாக உயர்த்துகிறது.
திடீர் பரபரப்பையோ, சஸ்பென்ஸையோ நம்பாமல் காதலுக்காக ஒரு கடத்தல், அவசர கல்யாணம் என மெதுவாக ஆரம்பித்து வேகம் கூட்டியிருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனம்.காதல் கல்யாணம் நடத்தி வைக்கிற நண்பர்களுக்கு ஏற்படும் இழப்புகளை காட்டியிருப்பதும் தமிழுக்கு புதுசுதான்.
விஜய்க்கு அப்பாவாக வரும் அந்த நடுத்தர வயது நபர், விளம்பர விரும்பியாக வந்து கிச்சுகிச்சு மூட்டும் நமோ நாராயணன் என சின்ன சின்ன கேரக்டர்கள் நம்மை வசீகரிக்கின்றன. இந்த மண் வாசனை கதைக்கு துளியும் பொருத்தமில்லாமல் பெண் அரசியல்வாதி கேரக்டர் ஓவராக கர்ஜிப்பது மட்டும் மகா டார்ச்சர்.ரத்தம் சிந்தி நடத்தி வைத்த காதல் கல்யாணம் அபத்தமாக அல்பாயுசில் முடிவது சற்றும் எதிர்பாராத சுவாரஸ்யம். ஆனால் அரிசி கடத்தல், ஈவ்டீசிங் ரேஞ்சுக்கு அதற்கு எதிராக பில்டப் வசனங்கள் தேவையா? தவிர்த்திருக்கலாம்.
நாடோடிகள் : நம் மனதில் நிரந்தர வீடு கட்டுகின்றனர்.

No comments:

Post a Comment