
ரயில்வே பட்ஜெட் முக்கிய அம்சங்கள்
சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட 50 ரயில்நிலையங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்.
தில்லி, சென்னை, கொல்கத்தா ஆகிய பெருநகரங்களில் 'மகளிர் மட்டும்' ரயில்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இத்தகைய ரயில்கள் பணிபுரியும் பெண்களுக்கு வசதியாக அலுவலக நேரங்களில் மட்டும் இயங்கும். ஏற்கெனவே இதுபோன்ற ரயில் மும்பையில் இயங்கி வருகிறது.
ரயில் நிலையங்களில் பல்நோக்கு வணிக வளாகங்கள் கட்டப்படும்
நீண்டதூர ரயில்களில் பயணிகளுக்கு அவசரச் சிகிச்சை அளிப்பதற்காக டாக்டர்கள் நியமனம்.
கூடுதலாக 200 டிக்கெட் முன்பதிவு மையங்கள் திறக்கப்படும்.
கூடுதலாக 3000 சாதாரண டிக்கெட் பெறும் கவுன்டர்கள் திறக்கப்படும்.
5000 அஞ்சலகங்களில் ரயில் டிக்கெட் பெறும் வசதி.
பெருநகரங்களுக்கு இடையேயான ரயில்களில் இரண்டடுக்கு கோச்கள் அறிமுகம்
சென்னை உள்ளிட்ட 7 இடங்களில் நர்சிங் கல்லூரிகள் திறக்கப்படும்.
18 ஆயிரம் புதிய சரக்கு ரயில் பெட்டிகளை வாங்கத் திட்டம்.
மாத வருமானம் ரூ.1500க்கும் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு 100 கி.மீ.வரை பயணம் செய்ய ரூ.25 க்கு மாதாந்திர சீசன் டிக்கெட் வழங்கப்படும்.
பத்திரிகையாளர்களுக்கான கட்டணச் சலுகை 30 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படும்.
சென்னை-தில்லி, சென்னை-அலகாபாத், புவனேசுவர் - தில்லி, எர்ணாகுளம்-தில்லி உள்ளிட்ட 12 பாயிண்ட் டூ பாயிண்ட் (இடையில் நிற்காத) ரயில் சேவைகள் தொடங்கப்படும்.
தத்கல் முன்பதிவு செய்யும் நாள்கள் 5-லிருந்து 2-ஆகக் குறைப்பு. தத்கல் கட்டணமும் குறைப்பு.
பயணிகள் மற்றும் சரக்குக் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை.
No comments:
Post a Comment