புதுதில்லி, ஜூலை.21: தில்லி இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தில் அமெரிக்க விமான நிறுவனத்தால் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 24 அன்று அமெரிக்கா செல்லும் கான்டினென்டல் ஏர்லைன்ஸ் விமானத்தில் கலாம் ஏறுவதற்கு முன்பு அவ்விமான பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் சாதாரண பயணியைப் போல சோதனை நடத்தியதாக கலாமுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
கலாம் இவ்விவகாரத்தை அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லவில்லை. எனினும் தற்போது இவ்விவகாரம் வெளியே வந்துள்ளதையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்த விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்புக்கு உத்தரவிட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரபுல் படேல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
'இப்போதுதான் இச்சம்பவம் குறித்து எனக்குத் தெரியவந்தது. இதில் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும், சம்மந்தப்பட்டவர்களை மன்னிப்புக் கேட்குமாறும் கூற உள்ளோம்' என்றார் அவர்.
இந்நிலையில், அவ்விமான நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி அபர்ணா கூறுகையில், இது விமான பாதுகாப்பின் வழக்கமான சோதனைதான் என்றும் விஐபி மற்றும் விவிஐபிக்களுக்கு என சிறப்பு விதிகள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Tuesday, 21 July 2009
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
பாதுகாப்பு நடவடிக்கை என்ற காரணத்தால் இது போன்ற சம்பவங்கள் இடம்பெறுவது துரதிர்ஷ்டமே! எமது நாட்டில் பாராளுமன்றத்தில் முதல் பெண் பிரதமர் என்ற பெருமைமிக்கவருக்கே இது நடந்திருக்கிறது. நான் தற்பொழுது வசிக்கும் சுவிற்சர்லாந்து நாட்டின் சட்டப்படி இங்கு சகல அதிகாரங்களும் பொலிசாரிடமே உள்ளது - விசாரணைக்காக அவர்கள் யாரையும் எதுவும் செய்ய முடியும். ஆசிய நாடுகளான எமது நாடுகளில் பொலிசாரிடம் அதிகாரங்கள் இல்லை - அந்த அதிகாரங்கள் வேறு சிலரது கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால்தான் குற்றங்களும் அதிகமாக இடம்பெறுகின்றன. அத்துடன் காவல்துறையும் களவு நிறைந்ததாக இருக்கிறது. உலக அறிவுடைய கலாநிதி அப்துல்கலாம் அவர்களே இதை பெரிதுபடுத்தவில்லை! என்ற செய்தி அவரது பெருந்தன்மையை எடுத்துக் காட்டுகிறது! இந்த நாட்டுக்குள் நாம் உள் நுழையும்போதே எமது 10 கைவிரல்களினதும் அடையாளங்கள் பெறப்பட்டு அதன்பின்னர்தான் எமக்கு அனுமதி அட்டை மற்றும் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். எமது நாட்டில் குற்றங்கள் இடம்பெற்ற பின்னர்தான் இவை பதியப்படுகின்றன. இவற்றை யார் தீர ஆராய்ந்து முடிவெடுப்பது என்பதே எமது நாடுகளின் தற்போதைய கேள்வி!
Thanks for ur comments, things will not change as u expect. we will wait & see, compliant is registered for this issue by Indian govt. APG is a big giant & gem of persons.
நானும் சேதி பார்த்தேன்.
கொஞ்சம் புதிரா இருப்பது ஒன்று.
பிரியங்காவின் கணவருக்கு சோதனை விதிவிலக்காம்.
ஒய் ஒய் ஒய்??????
Post a Comment