Saturday, 20 June 2009

விமர்சனம் - குளிர் 100 டிகிரி


Movie - Kulir 100 Degree
Director - Anita Udeep
Music - Bobo Sasi
Cast - Sanjeev, Aditya, Riya
Rate -
தன்னை உயிருக்குயிராய் நேசிக்கும் சக நண்பனின் மரணத்துக்கு காரணமானவர்களை பழிவாங்கும் மாணவனான சூர்யாவுக்கு ஏற்படும் நிலையை குளிரக் குளிரச் சொல்ல வந்திருக்கிறார் படத்தின் இயக்குநர் அனிதா உதீப்.
பள்ளியல் மாணவர்களுக்கு இடையே நடக்கும் ஈகோ மோதல்களும், நட்பும், நேசிப்பும்தான் கதையின் மையம். படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு அழகிய குளிர் பிரதேச உயர் வகுப்பினர் மட்டுமே படிக்கும் லேக் வியூ மேல்நிலைப் பள்ளியில் கல்வி கற்க வருகிறான் மிகப்பெரும் ரவுடியான ஆறுமுகத்தின் மகன் சூர்யா. (பிந்துகோஷை ஞாபகப்படுத்தும்படியான) “பப்ளு'வின் உதவியால் சூர்யா ஜெயிக்க, கோபத்தின் உச்சியில் பப்ளூவை கொன்று விடுகின்றனர், ரோஹிந்தும் அவனது நண்பர்களும். அதன் பிறகு சூர்யா என்னவானான் என்பதே படத்தின் மீதிக் கதை.
சூர்யாவின் தாயாக வருபவர், சூர்யாவின் காதலியான தான்யா இருவர் மட்டுமே படத்தின் பெண் கதாபாத்திரங்கள். இருவருமே போட்டி போட்டுக் கொண்டு ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் தங்கள் பாத்திரத்தை வெளிப்படுத்தி சபாஷ் வாங்கிக் கொள்கின்றனர். அடுத்த சபாஷ் கலர்ஃபுல்லான அதே சமயத்தில் சரியான ஆடை வடிவமைப்பும், ஒளிப்பதிவும் செய்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு!
இயக்குநர் லாஸ் ஏஞ்சல்ஸில் மூன்று வருட ஃபிலிம் மேக்கிங் கோர்ஸ் படித்துவிட்டு, அமெரிக்காவின் பிரமாண்ட இயக்குநரான ஸ்டீவன் ஸ்பீலபெர்க்கின் கம்பெனியில் வேலை செய்தவராம். ஆனாலும் கதையும், அதை வழிநடத்தும் திரைக்கதையும் தெளிவில்லாமல் போனதால் வெறும் அழகியலோடு மட்டுமே படம் முடிந்து போவதும், முடிவை சரியாக சொல்ல தெரியாமல் விட்டிருப்பதும் படத்தின் மைனஸ்.

No comments:

Post a Comment