
வீட்டில் தனியாக இருந்த வேலைக்கார பெண்ணை நடிகர் ஷைனி கற்பழித்து விட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த பெண் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிவில் பெண்ணை கற்பழித்தது நடிகர் ஷைனிதான் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை நடிகர் ஷைனி அகுஜா கைது செய்யப்பட்டார். மும்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ஷைனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நடிகர் ஒருவர் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்தால் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
No comments:
Post a Comment