ஆக.18- டுனிசியா நாட்டில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் 12 குழந்தைகள் உருவாகியுள்ளன.
ஆசிரியையாக பணிபுரியும் அவரது பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை. செயற்கைக் கருவூட்டல் சிகிச்சை மூலம் அவர் 12 குழந்தைகளுக்கு தாயாக உள்ளார். இதில், 6 ஆண் குழந்தைகள், 6 பெண் குழந்தைகள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரே பிரசவத்தில் 12 குழந்தைகள் பிறக்கவுள்ள மகிழ்ச்சியில் அந்தத் தம்பதியினர் உள்ளனர். எனினும், அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களின் செயல் 'பொறுப்பற்றதாக உள்ளது' என்று ஏனைய செயற்கைக் கருவூட்டல் மருத்துவர்கள் கூறியுள்ளனர். அந்த பெண்ணிற்கு எந்த வகையான சிகிச்சை அளிக்கப்பட்டது என்று தெரியவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுளளனர். இதே கருத்தை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியர் சைமன் பிஃஷர் கூறியுள்ளார்.
தனது மனைவி சுகப்பிரசவம் மூலம் குழந்தைகளை பெற்றுக்கொள்வார் என்று அவரது கணவர் கூறியுள்ளார். எனினும், இது சாத்தியமில்லாதது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Tuesday, 18 August 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment