
சென்னையில் பன்றி காய்ச்சல் நோய் அறிகுறி உள்ளவர்கள், தண்டையார்பேட்டையில் உள்ள தொற்று நோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது 27 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறி காரணமாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நடத்த்பபட்ட மருத்துவ பரிசோதனையில் 17 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.மற்ற பத்து பேரும் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் ரத்த மாதிரி கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பப்பட்டு முடிவுகளுக்காக டாக்டர்கள் காத்துள்ளனர்.
சென்னை அடையாறில் உள்ள ஐ.ஐ.டி. கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் அந்த மாணவன் 4-ம் வகுப்பு படிக்கிறான். இந்த பள்ளியில் ஐ.ஐ.டி.யில் பணியாற்றும் பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் வெளியாட்களின் குழந்தைகள் படிக்கின்றனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை மொத்தம் 57 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment