Sunday 9 August, 2009

சிந்தனை செய் - விமர்சனம்

Movie - Sindhanai Sei
Director - Yuvan
Music - Thaman.
Cast - Yuvan, Bala, Seshanth, Nithish Kumar, Sabi, Madhu Sharma, Dharsha
Rate -

யுவன், நித்திஷ், பாலா, செஷாந்த், சபி ஆகிய ஐவரும் மேற்படி நடு பெஞ்ச் மாணவர்களாக ஒரு பள்ளியில் ஒரே வகுப்பில் படித்து பெரியவர்களானவர்கள். சின்ன சின்ன திருட்டுகள் செய்து பிழைப்பு நடத்தும் ஐவரும் ஒரு கட்டத்தில் மொத்தமாக கொள்ளையடித்து பெரிதாக செட்டிலாக திட்டமிடுகின்றனர். அதன்படி ஒரு பெரிய வங்கியில் ஐந்து கோடி கொள்ளையடிக்கும் ஐவரும், பணத்தாசையில் ஒருத்தரை ஒருத்தர் தீர்த்துக் கட்ட முயன்று, அதில் யார் வெற்றி பெறுகின்றனர், அப்படி வெற்றி பெறுபவர் அந்த பணத்தை என்ன செய்கிறார் என்பது சிந்தனை செய் படத்தின் சிந்தனை செய்ய வேண்டிய மீதிக்கதை! இதனூடே யுவன் - மதுசர்மாவின் காதல் கல்யாண கலாட்டாக்களையும் கலந்து கட்டி பிரமாதமாக கதை சொல்லி இருக்கிறார் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி முதல் நாயகனாக நடித்தும் இருக்கும் ஆர்.யுவன்.
ஐந்து நாயகர்கள், நாயகி மதுசர்மா மாதிரியே காதல் தண்டபாணி, மயில்சாமி, கோட்டை குமார், அண்ணாத்துரை கண்ணதாசன், சபியின் மனைவியாக வரும் தர்ஷா உள்ளிட்ட அனைவரும் பாத்திரத்திற்கேற்ற பளிச் தேர்வு.
டூ வீலரில் ரோட்டில் அடிபட்டு கிடப்பவரிடமும், காரில் காதலியுடன் வந்து மாட்டுபரிடமும் இந்த நடந்து கொள்ளும் முறையிலேயே இவர்களது குணாதிசயங்களை புட்டு புட்டு வைத்து விடும் இயக்குனர், இறுதியில் இப்படி ஒரு கொள்ளையையும், இத்தனை கொலைகளையும் யுவன் செய்வதற்காக கூறும் காரணத்தையும், அதன்பின் அவனுக்கு நிகழும் கொடூரத்தையும் மிக அழகாக படம் பிடித்து முன்னணி இளம் இயக்குனர்கள் வரிசையில் இடம் பிடித்து விடுகிறார் யுவன். அவருக்கு அடுத்த இடத்தை பிடித்து தர பெரிதும் ஒத்துழைக்கின்றனர் இசையமைப்பாளர் தமன்.எஸ், ஒளிப்பதிவாளர் ஸ்ரீபவன் சேகர், படத்தொகுப்பாளர் கே.தணிகாச்சலம் உள்ளிட்ட அனைவரும்.
இப்படத்தில் பங்குபெற்றுள்ள ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவராலும் சிந்தனை செய் ஒவ்வொரு ரசிகனின் சிந்தனையையும் தூண்டச் செய்யும் படமாகும்.

No comments:

Post a Comment