ஆக. 10: பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த நான்கு வயதுச் சிறுவன் சஞ்சய் உயிரிழந்தார்.யு.கே.ஜி. படித்து வந்த அந்தச் சிறுவனுக்கு சில தினங்களுக்கு முன்பு தொண்டை வலி, மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவன் சேர்க்கப்பட்டான்.
சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, அவனது ரத்த மாதிரி சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆராய்ச்சி மையத்துக்கு வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டது. பன்றிக் காய்ச்சல் இருப்பது ரத்தப் பரிசோதனையில் உறுதியானது.
பன்றிக் காய்ச்சல் காரணமாக சிறுவனின் கல்லீரல், நுரையீரல், சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு மயக்க நிலை ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார். இதையடுத்து வேளச்சேரியில் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. உயிரிழந்த சிறுவன் படித்த பள்ளி மாணவர்களின் அனைவரது வீடுகளுக்கும் மருத்துவர்கள் சென்று பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிறுவனின் பலியை அடுத்து பன்றிக் காய்ச்சலால் பலியானோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.





3 comments:
So sad to hear this news. It would be so difficult for the parents.
வருந்த தக்க விஷயம்..
சிறுவனின் குடும்பத்தார்க்கு இரங்கல்.
Post a Comment