ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின் மகேஷ் பூபதி ஜோடி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றது.
கனடாவின் மான்ட்ரியல் நகரில் ஏடிபி அந்தஸ்து பெற்ற ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடர் நடந்தது. நேற்று நடந்த பைனலில் இந்தியாவின் மகேஷ் பூபதி, பகாமசின் மார்க் நோவல்ஸ் ஜோடி, பெலாரசின் மேக்ஸ் மிரின்யி, இஸ்ரேலின் ஆன்டி ராம் ஜோடியுடன் மோதியது.
இதில் பூபதி ஜோடி புயல்வேக சர்வீஸ்களால் எதிர் ஜோடியை திணறச் செய்தது. ஆட்டம் முழுவதிலும் ஆதிக்கம் செலுத்திய பூபதி ஜோடி முதல் செட்டை 6-4 என வென்றது. இரண்டாவது செட்டிலும் அசத்திய இந்த ஜோடி, அதை 6-3 என்றது.
இறுதியில் சுமார் ஒரு மணி நேரம் 12 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் பூபதி ஜோடி 6-4, 6-3 என வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றியது.
இது பூபதி கைப்பற்றும் ஐந்தாவது ரோஜர்ஸ் கோப்பை இரட்டையர் பட்டமாகும். முன்னதாக பூபதி, லியாண்டர் பயசுடன் 1997 மற்றும் 2004லிலும், மேக்ஸ் மிரின்யியுடன் 2003லும், பாவெல் விஸ்னருடன் 2007லும் ஜோடி சேர்ந்து இங்கு பட்டம் வென்றுள்ளார்.
Monday, 17 August 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment