Sunday 16 August, 2009

2 ஆண்டுகளுக்கு பின் டிராவிட்-ஒரு நாள் அணியில் அறிவிப்பு

இலங்கை முத்தரப்பு மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின் டிராவிட் மீண்டும் ஒரு நாள் அணியில் இடம்பிடித்துள்ளார்.
இந்தியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர் வரும் 8ம் தேதி இலங்கையில் துவங்குகிறது. இதை தொடர்ந்து இந்திய அணி வரும் 22ம் தேதி ஆரம்பமாகும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கிறது.
இந்த இரண்டு தொடர்களுக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் கூட்டம், தேர்வு குழு தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று சென்னையில் நடந்தது.
இந்த கூட்டத்தின் முடிவில் 7 பேட்ஸ்மேன்கள், 2 விக்கெட் கீப்பர்கள், 2 சுழற்பந்து வீச்சாளர்கள், 4 வேகப்பந்து வீச்சாளர்கள் என 15 பேர் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதில் 'இந்திய சுவர்' என்று கிரிக்கெட் ரசிகர்களால் வர்ணிக்கப்படும் ராகுல் டிராவிட்டுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2007 அக்டோபரில் ஒரு நாள் போட்டியில் பங்கேற்ற டிராவிட் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் களமிறங்க இருக்கிறார்.
அதே போல் கடைசியாக நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடர் பங்கேற்காத சச்சின், ரெய்னா ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். கேப்டனாக டோணியும், துணை கேப்டனாக யுவராஜூம் தேர்வு செய்யப்பட்டு்ள்ளனர்.
அதிரடி துவக்க வீரர் விரேந்தர் ஷேவாக்கிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சமீபத்தில் வலது தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவருக்கு மேலும், சில நாட்களில் ஓய்வு கொடுக்க திட்டமிட்டிருப்பதாக தேர்வு குழு தெரிவித்துள்ளது.

1 comment:

வழிப்போக்கன் said...

பார்ப்போம் கலக்குகிறாரா என்று...

Post a Comment